- நவம்பர் 6 ஆம் தேதி உலகளவில் அறிமுகப்படுத்தப்படும்
- இதில் 1.0 லிட்டர் டீஎஸ்ஐ பெட்ரோல் இன்ஜின் இருக்கும்
ஸ்கோடா 9 ஆண்டுகளுக்குப் பிறகு காம்பேக்ட் செக்மெண்ட்டில் மீண்டும் வர உள்ளது, மேலும் அதன் புதிய எஸ்யுவியான கைலாக் நவம்பர் 6 ஆம் தேதி சர்வதேச அளவில் அறிமுகப்படுத்தப்படும். இதற்க்கு முன்னதாக, இந்த காரின் இன்ஜின் மற்றும் சில முக்கிய அம்சங்களை நிறுவனம் வெளியிட்டது. இந்த செக்மெண்ட்டில் உள்ள மற்ற கார்களுக்கு இந்த இன்ஜின் எவ்வளவு போட்டியை கொடுக்கிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
ஸ்கோடா கைலாக் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் இன்ஜினைப் பெறும், இது 114bhp மற்றும் 178Nm டோர்க்கையும் உற்பத்தி செய்கிறது. இது சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் சிக்ஸ்-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் வழங்கப்படும். ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் கார்களில் காணப்படும் அதே இன்ஜின் இதுவாகும்.
கைலாக் மஹிந்திரா XUV 3XO, ஹூண்டாய் வென்யூ, கியா சோனெட் மற்றும் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் போன்ற கார்களுடன் போட்டியிடும். மஹிந்திராவின் 1.2-லிட்டர் ஜிடிஐ எம்ஸ்டாலியன் இன்ஜின் அதிக டோர்க்கை (230Nm) உற்பத்தி செய்கிறது மற்றும் வென்யூ மற்றும் டைசர் 172Nm டோர்க்கை உற்பத்தி செய்கிறது, அதே நேரத்தில் கையாக்கின் 1.0-லிட்டர் இன்ஜின் 114bhp மற்றும் 178Nm டோர்க்கை உற்பத்தி செய்கிறது. ஃப்ரோன்க்ஸ் மற்றும் டைசர் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் வந்தாலும், கையாக் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆப்ஷன்களுடன் கிடைக்கும்.
ஸ்கோடா கைலாக்கின் பவர் மற்றும் டோர்க் புள்ளிவிவரங்கள், மிட்-ரேஞ்சில் தனித்து நிற்கும் ஒரு சமச்சீர் எஸ்யுவியாகும். குறிப்பாக ஸ்கோடாவின் ஓட்டுநர் திறன்களைக் கருத்தில் கொண்டு, இது ஒரு ஃபன்-டூ-டிரைவ் கார் என்பதை நிரூபிக்க முடியும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்