- 2025 இல் லான்ச் ஆகும்
- 1.0 லிட்டர் டீஎஸ்ஐ பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே வழங்கப்படும்
ஸ்கோடாவின் காம்பேக்ட் எஸ்யுவி மீண்டும் சோதனையின் போது தென்ப்பட்டது, இந்த முறை அதன் டிசைனின் சில பகுதிகள் காணப்பட்டன. இதில் ஸ்கோடாவின் சிக்னேச்சர் கிரில், லோ-செட் ஹெட்லேம்ப்ஸ் மற்றும் கிரில் அருகே ஹை-மவுண்ட்டெட் எல்இடி டிஆர்எல்ஸைக் கொண்டிருந்தன.
விண்ட்ஸ்கிரீன் மற்றும் சைட் கண்ணாடிகளின் பொசிஷன் இந்தப் படங்களில் தெரியும், இது ஸ்கோடா குஷாக்கைப் போலவே உள்ளது. சிறிய டெயில் லேம்ப் மற்றும் ரியரில் தெரியும் மல்டி-ஸ்போக் அலோய் வீல்ஸ், இது இந்த டெஸ்ட் ம்யூல் டாப் மாடல் என்பதைக் காட்டுகிறது.
ஸ்கோடாவின் இந்த காம்பேக்ட் எஸ்யுவி 2025 ஆம் ஆண்டில் வெளியிடப்படும் மற்றும் சப்-ஃபோர் மீட்டர் காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில் விற்பனையை அதிகரிப்பதே இதன் நோக்கமாகும். ஸ்கோடாவிற்கு இந்தியாவில் ஒரு பெரிய பங்களிப்பு உள்ளது மற்றும் இந்த புதிய எஸ்யுவி விற்பனையை அதிகரிக்க உதவும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்