- 2025 இல் தொடங்கப்படும்
- இதற்கான 10 பெயர்கள் ஏற்கனவே ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளன
ஸ்கோடாவின் புதிய மாடல் மீண்டும் டெஸ்டிங்க்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறை கார் முற்றிலும் இறுக்கமாக மூடப்பட்டிருந்தது, இதன் காரணமாக அதன் டிசைன் மற்றும் லூக்கை பற்றி ஒரு தகவல் பெறுவது எங்களுக்கு எளிதாகிவிட்டது.
இதன் பெரும்பாலான டிசைன் அதன் குஷாக் மாடலில் இருந்து எடுக்கப்பட்டதாக ஸ்பை படங்களில் வெளிப்படுத்துகின்றன. மேலும், இந்த ஸ்பை படங்களில் ஹெட்லேம்ப்ஸின் பொசிஷன் மற்றும் டிசைன் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர இதில் கிடைக்கும் அலோய் வீல்ஸின் டிசைனும் வெளியாகியுள்ளது.
நாம் ஏற்கனவே அறிந்தபடி, அதன் பெரும்பாலான அம்சங்கள் மற்றும் கேபின் தோற்றம் குஷாக் மற்றும் ஸ்லாவியாவிலிருந்து வாங்கப்படும், அதே நேரத்தில் இந்த கார்கள் இந்த மாடல்களிலிருந்து தனித்து நிற்கும் வகையில் சிறிய அம்ச மாற்றங்களைப் பெறும். இந்த செக்மெண்ட்டில் உள்ள பெரும்பாலான கார்களைப் போலவே, இந்த காரின் நீளம் 3.99 மீட்டராகவும், வீல்பேஸ் 2.6 மீட்டராகவும் இருக்கும். மற்ற ஸ்கோடா மாடல்களைப் போலவே, இது 1.0-லிட்டர் டீஎஸ்ஐ பெட்ரோலுடன் வழங்கப்படும், இது 115bhp மற்றும் 175Nm டோர்க்கை உருவாக்குகிறது மற்றும் சிக்ஸ்-ஸ்பீட் எம்டீ அல்லது சிக்ஸ்-ஸ்பீட் டோர்க் கன்வர்டர் ஆட்டோமேட்டிக் உடன் இணைக்கப்படலாம்.
இந்த காம்பேக்ட் எஸ்யுவி மாருதி பிரெஸ்ஸா, மாருதி ஃப்ரண்ட், ரெனோ கைகர், நிசான் மேக்னைட், கியா சோனெட், மஹிந்திரா XUV3XO மற்றும் ஹூண்டாய் வென்யூ ஆகியவற்றுடன் போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்