- இந்தியா 2.0 ப்ரோக்ராமின் கீழ் இது மூன்றாவது கார் ஆகும்
- இதில் 1.0 லிட்டர் டீஎஸ்ஐ பெட்ரோல் இன்ஜின் இருக்கும்
இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஸ்கோடா தனது மூன்றாவது புதிய காரை 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்துவதாகக் கூறியது. இது ஒரு சிறிய காம்பேக்ட் எஸ்யுவியாக இருக்கும் மற்றும் அதன் பெயர் ஆகஸ்ட் 21, 2024 அன்று வெளியிடப்படும்.
குஷாக் மற்றும் கோடியாக் போன்ற 'K' இல் தொடங்கும் பெயர்களை நோக்கி நிறுவனம் செல்கிறது. இது 1.0-லிட்டர் டீஎஸ்ஐ பெட்ரோல் இன்ஜினை கொண்டிருக்கும், இது 114bhp மற்றும் 175Nm டோர்க்கை உருவாக்கும் மற்றும் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் (எம்டீ) அல்லது சிக்ஸ்-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் (ஏடீ) கியர்பாக்ஸுடன் வரும்.
இதன் டிசைன் ஸ்கோடா குஷாக்கைப் போலவே இருக்கும், அதே ஃப்ரண்ட் லூக், வீல் டிசைன் மற்றும் டெயில் லைட்ஸுடன் இருக்கும். டூயல் டிஜிட்டல் ஸ்கிரீன், க்ளைமேட் கன்ட்ரோல், கனெக்டெட் கார் டெக்னாலஜி மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை இதில் அடங்கும். இந்த ஸ்கோடா கார் மாருதி பிரெஸ்ஸா, கியா சோனெட், ஹூண்டாய் வென்யூ, மஹிந்திரா XUV300, மாருதி ஃப்ரோன்க்ஸ் மற்றும் டொயோட்டா டைசர் போன்ற கார்ஸுடன் போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்