- 1.0-லிட்டர் இன்ஜின்க்கு சான்றிதழ் பெற்றுள்ளது
- 1.5-லிட்டர் இன்ஜின் 2024 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
E20 எஃபியூல்க்கான அதிகாரப்பூர்வ சான்றிதழைப் பெற்ற முதல் பிராண்டுகளில் ஒன்றாக ஸ்கோடா இந்தியா மாறியுள்ளது. ஸ்கோடாவின் 1.0 லிட்டர் இன்ஜினுக்கு E20 ஃபியூல்-இணக்க சான்றிதழை இந்திய ஆட்டோமோட்டிவ் ரிசர்ச் அசோசியேஷன் (ஏஆர்ஏஐ) வழங்கியுள்ளது. 1.5 லிட்டர் எஞ்சின் 2024 இறுதிக்குள் சான்றிதழைப் பெறும்.
தற்போது, 1.0 லிட்டர் டீஎஸ்ஐ டர்போ-பெட்ரோல் இன்ஜின் குஷாக் மற்றும் ஸ்லாவியா கார்களில் கிடைக்கிறது. இந்த இன்ஜின் E20 ஃபியூல்-இணக்கமானது, அதாவது ஃபியூலில்20 சதவீதம் எத்தனால் மற்றும் 80 சதவீதம் பெட்ரோல் உள்ளது. இந்திய அரசாங்கம் ஏப்ரல் 2025 முதல் அனைத்து வாகனங்களுக்கும் E20-இணக்கத்தைக் கட்டாயமாக்கியுள்ளது. ஃபோக்ஸ்வேகன் வர்டஸ் மற்றும் டைகுன் கார்களும் இதே இன்ஜினைப் பயன்படுத்துவதால், அவைகளும் விரைவில் இந்த சான்றிதழைப் பெறும்.
ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் பிராண்ட் இயக்குநர் பீட்டர் ஜன்னேபா கூறுகையில், 'எங்கள் கார்கள் ஓட்டுதல் மற்றும் பாதுகாப்பில் சிறந்தவை. ஃபியூல் எஃபிஷியன்சி மற்றும் நிலைத்தன்மையும் எங்களுக்கு முக்கியம். டீஎஸ்ஐ டெக்னாலஜி சிறப்பாகச் செயல்படுகிறது. 1.0 டீஎஸ்ஐ இன்ஜின் பவர் மற்றும் மைலேஜுக்கு நல்லது மற்றும் E20 சான்றிதழ் அதற்கு சான்றாகும். அதே முடிவு 1.5 டீஎஸ்ஐக்கும் கிடைக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்’ என்று அவர் கூறினார்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்