- செவன் சீட்டர்க்கு அதிக தேவை உள்ளது
- அக்டோபர் 8 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமானது
பிஒய்டி இந்தியா சமீபத்தில் தனது புதிய eMax7 இவி எம்பிவியை அறிமுகப்படுத்தியுள்ளது மற்றும் அதன் செவன் சீட்டர் வேரியன்ட்டிற்கான தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. ஆறு சீட்டர்களை விட ஏழு சீட்டர் கொண்ட வேரியன்ட்டின் விலை ரூ. 60,000 அதிகம், ஆனால் இரண்டு வேரியன்ட்ஸின் அம்சங்கள் மற்றும் ரேஞ்ச் ஒரே மாதிரியானவை. பிஒய்டி அக்டோபர் 8 ஆம் தேதி இந்த எம்பிவியை அறிமுகப்படுத்தியது, இது வரை சுமார் 1000 முன்பதிவுகளைப் பெற்றுள்ளது, இது இந்த பிரிவில் ஒரு பெரிய முன்னேற்றமாகும்.
பிஒய்டி eMax7 இன் டாப் வேரியன்ட்டின் தேவையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனுடன், ஒயிட் மற்றும் சில்வர் வண்ண விருப்பங்கள் வாடிக்கையாளர்களால் மிகவும் விரும்பப்படுகின்றன. இந்த தேவை 1700 யூனிட் விற்பனையை எட்டிய e6 ஐ விட அதிகமாக உள்ளது. இருப்பினும், லாக்டவுனுக்குப் பிறகு சந்தை மெதுவாகத் திறக்கப்பட்டபோது e6 இன் லான்ச் கடினமான நேரத்தில் வந்தது.
பிஒய்டி eMax7 ஆனது நீங்கள் தேர்வு செய்யும் பேட்டரி பேக் மற்றும் வேரியன்ட்டைப் பொறுத்து 420 கிமீ மற்றும் 530 கிமீ உட்பட இரண்டு டிரைவிங் ரேஞ்ச் விருப்பங்களில் கிடைக்கிறது. அம்சங்களைப் பொறுத்தவரை, இது e6 ஐ விட முன்னால் உள்ளது. இது 12.3-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஃபோன் மிரரிங், ஏர் ப்யூரிஃபையர், பனோரமிக் சன்ரூஃப், பவர்ட் டெயில்கேட், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் லெவல் 2 ஏடாஸ் போன்ற நவீன அம்சங்களைக் கொண்டுள்ளது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்