- அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும்
- VF e34 ஹூண்டாய் க்ரெட்டா/கியா செல்டோஸ் மாடல்களின் அதே சைஸ்
இந்தியாவில் தென்ப்பட்டது
சில மாதங்களுக்குப் பிறகு, புதிய வின்ஃபாஸ்ட் பிராண்ட் தமிழ்நாட்டில் ஒரு புதிய ஆலையை மிகப்பெரிய அளவில் அமைக்கும், அதற்கு முன் வின்ஃபாஸ்ட் பிராண்ட் கார்களை இந்தியாவில் சோதனை செய்யத் தொடங்கியுள்ளன. இந்தியாவில் VF e34 மிட்-சைஸ் எஸ்யுவி சோதனையின் புகைப்படங்களை நாங்கள் எடுத்தோம், அவற்றை உங்களுக்கு பிரத்தியேகமாக இங்கே வழங்குகிறோம்.
இன்ஜின் மற்றும் டைமென்ஷன்
VF e34 மாடல் தற்போது வியட்நாம் மற்றும் இந்தோனேசியாவில் விற்பனையில் உள்ளது, இது வாகன உற்பத்தியாளரிடமிருந்து அதன் ரேஞ்சில் மிகச்சிறிய கார் ஆகும். மேலும், இது 110kW பேட்டரி பேக்குடன் 318 கிமீ தூரத்தை வழங்குகிறது. தற்போது வழங்கப்படும் இவி மாடல்களுடன் ஒப்பிடும்போது இந்த மாடலில் அதிக பேட்டரி பேக் உள்ளது. அதேபோல், இந்த மாடல் 0-100 கிமீ வேகத்தை வெறும் 9 வினாடிகளில் அடையும். மற்றும் மிக முக்கியமாக, டைமென்ஷன்ஸைப் பொறுத்தவரை, கார் 4.3 மீட்டர் நீளம் மற்றும் 2.6 மீட்டர் வீல்பேஸ் கொண்டது. மேலும் இது அதன் அளவைப் பொறுத்து கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், ஹோண்டா எலிவேட் மற்றும் எம்ஜி ஆஸ்டர் போன்ற மாடல்களுடன் போட்டியிடும்.
கேபின் மற்றும் அம்சங்கள்
கேபினுக்கு வரும்போது, க்ரே நிறத்தில் குரோம் இன்சர்ட்ஸுடன் வெர்டிகல் யூனிட்டுடன் டூயல் டிஜிட்டல் டிஸ்ப்ளே உடன் வருகிறது. அதன் அம்சங்களைப் பற்றி பேசுகையில், இது லெவல்-2 ஏடாஸ், க்ளைமேட் கன்ட்ரோல், டூயல் யுஎஸ்பி சார்ஜிங் போர்ட்ஸ், ஹைலைன் டீபீஎம்எஸ், கனெக்டெட் கார் டெக்னாலஜி மற்றும் 360 டிகிரி கேமரா போன்ற அப்டேடெட் அம்சங்களுடன் வருகிறது. ஒட்டுமொத்தமாக, அதன் எந்த போட்டியாளர்களாலும் ஒப்பிட முடியாத அம்சங்களின் பட்டியலின் அடிப்படையில் இது சிறந்த அம்சங்களுடன் வர வாய்ப்புள்ளது.
விலை மற்றும் போட்டி
இந்தியாவில் முதன்முறையாக VF e34 மாடலைப் பார்க்கும்போது, இப்போது அது வின்ஃபாஸ்ட் வரிசையின் ஒரு பகுதியாக இங்கு வரவுள்ளது. மேலும் விலைக்கு வரும்போது வின்ஃபாஸ்ட் VF e34 மாடலின் விலை ரூ. 20 லட்சம் முதல் ரூ. 25 லட்சம் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கிறோம். மேலும், இது எம்ஜி ZS இவி, மாருதி eVX, கியா கேரன்ஸ் இவி, மஹிந்திரா XUV.e8, ஹோண்டா எலிவேட் இவி மற்றும் டொயோட்டா அர்பன் ஸ்போர்ட் கான்செப்ட் ஆகியவற்றுடன் போட்டியிட வாய்ப்புள்ளது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்