- கர்வ் இவி வெர்ஷன் ஆகஸ்ட் 7 அன்று வெளியிடப்படும்
- ஆல்-எலக்ட்ரிக் மாடலில் ஐந்து ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீடுகளை பெற்ற மூன்றாவது எலக்ட்ரிக் கார்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டாடா கர்வ் மற்றும் கர்வ் இவி’யின் வெளியீட்டை நெருங்க நெருங்க, ஆகஸ்ட் 7 ஆம் தேதி அதை திட்டமிடப்பட்டுள்ளது, இந்த கூபே எஸ்யுவிகள் பற்றிய மற்றொரு பிரத்யேக செய்தி எங்களுக்கு கிடைத்துள்ளது. GNCAP மற்றும் BNCAP இன் கீழ் நடத்தப்பட்ட கிராஷ் டெஸ்டில் கர்வின் இரண்டு வேரியன்ட்ஸின் கிராஷ் டெஸ்ட் ரிபோர்ட் எங்களிடம் உள்ளன.
எங்கள் ஆதாரங்களின்படி, டாடா கர்வின் இவி மற்றும் ஐசிஇ வெர்ஷன்ஸ் ஜிஎன்கேப் மற்றும் பிஎன்கேப் கிராஷ் டெஸ்ட்டில் முழு ஐந்து நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. இதன் மூலம், வரவிருக்கும் கூபே எஸ்யுவி, சஃபாரி, ஹேரியர், நெக்ஸான், நெக்ஸான் இவி மற்றும் பஞ்ச் இவி உள்ளிட்ட டாடா எஸ்யுவிகளின் பட்டியலில் அதிக சேஃப்டி மதிப்பெண்களைப் பெறுகிறது.
சமீபத்திய டாடா மாடல்களின் சாதனையைக் கருத்தில் கொண்டு பாதுகாப்புத் தரங்களின் அடிப்படையில் கர்வ் ஒரு நல்ல ரேட்டிங்கை தரும் என்று ஏற்கனவே எதிர்பார்த்தோம். பாதுகாப்பு தொகுப்பைப் பொறுத்தவரை, கர்வ் ஆனது ஆறு ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், நான்கு டிஸ்க் பிரேக்குகள், த்ரீ-பாயிண்ட் சீட்பெல்ட்ஸுடன் அனைத்து பயணிகளுக்கும் சீட்பெல்ட் ரிமைன்டர், ட்ராக்ஷன் கன்ட்ரோல், ப்ளைன்ட் ஸ்பாட் மானிட்டர் கொண்ட 360 டிகிரி கேமரா மற்றும் லெவல் 2 ஏடாஸ் போன்ற டெக்னாலஜி ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்