- புதிய வர்ச்சுவல் சன்ரைஸ் வண்ணத்தில் கிடைக்கும்
- விலை நாளை அறிவிக்கப்படும்
டாடா மோட்டார்ஸ் இறுதியாக தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கர்வ் இவியை நாளை இந்தியாவில் லான்ச் செய்ய உள்ளது. மேலும், கர்வ் ஐசிஇ வெர்ஷனும் நாளை இவி வெர்ஷன் உடன் அறிமுகப்படுத்தப்படும். இரண்டு மாடல்கள் பற்றிய பல தகவல்களை நாங்கள் ஏற்கனவே கொடுத்துள்ளோம். இப்போது, கர்வ் இவி’யின் வண்ண விருப்பங்களைப் பற்றிய தகவலைப் பெற்றுள்ளோம், இந்த கட்டுரையில் நாம் அதை பற்றி விரிவாக பார்போம்.
ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, டாடா கர்வ் இவி ஆனது ப்ரிஸ்டின் ஒயிட், ஃபிளேம் ரெட், எம்பவர்ட் ஒயிட், ப்யூர் க்ரே மற்றும் வர்ச்சுவல் சன்ரைஸ் உள்ளிட்ட ஐந்து வண்ண விருப்பங்களில் வழங்கப்படும். முந்தைய நான்கு வண்ணங்கள் பஞ்ச் இவி மற்றும் நெக்ஸான் இவி’யில் ஏற்கனவே கிடைத்தாலும், வர்ச்சுவல் சன்ரைஸ் முற்றிலும் புதிய வண்ணமாகும், இது முதல் முறையாக கர்வ் இவி’யில் வழங்கப்படும்.
பேட்டரி பேக் மற்றும் டிரைவிங் ரேஞ்ச் பற்றி பேசுகையில், கர்வ் இவி ஆனது MR மற்றும் LR ஆகிய இரண்டு வேரியன்ட்ஸில் வழங்கப்படும், இதில் 55kWh வரை பேட்டரி பேக் இருக்கும், இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 600 கிமீ வரை டிரைவிங் ரேஞ்சை வழங்கும். கூடுதலாக, கர்வ் இவி ஆனது டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் 10 நிமிடங்களில் 100 கிமீ டிரைவிங் ரேஞ்சை வழங்கும்.
அலான்ச் ஆனதும், டாடா கர்வ் இவி ஆனது மஹிந்திரா XUV400, எம்ஜி ZS இவி, பிஒய்டி அட்டோ 3 மற்றும் வரவிருக்கும் ஹூண்டாய் க்ரெட்டா இவி போன்றவற்றுடன் போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்