- மே 9, 2024 அன்று வெளியிடப்படும்
- இன்ஜினில் எந்த மாற்றமும் எதிர்பார்க்கப்படவில்லை
நியூ ஜெனரேஷன் ஸ்விஃப்ட் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய மாருதி சுஸுகி நிறுவனம் தயாராகி வருகிறது. இது மே 9, 2024 அன்று அறிமுகப்படுத்தப்படும், மேலும் இந்த பிரபலமான ஹேட்ச்பேக்கின் சிறப்பம்சங்களை அறிமுகம் செய்வதற்கு சற்று முன்பு நாங்கள் இந்த கட்டுரையில் உங்களுக்கு சொல்லப் போகிறோம்.
இருப்பினும், இந்த மாடல் ஏற்கனவே சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, எனவே அதன் அம்சங்கள் மற்றும் இன்ஜின் பற்றி ஏற்கனவே அறிந்திருக்கிறோம். இந்தியா-ஸ்பெக் மாடல் ஃப்ரோன்க்ஸ் மற்றும் பிரெஸ்ஸாவிலிருந்து சில அம்சங்களை பெறும். இதில் 9-இன்ச் ஸ்மார்ட்ப்ளே ப்ரோ+ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆர்காமிஸ் மியூசிக் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், எல்இடி ஃபாக் லேம்ப்ஸ், எல்இடி ஹெட்லேம்ப்ஸ் மற்றும் ஆறு ஏர்பேக்ஸ் (ரேஞ்ச் முழுவதும்) ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இது தவிர, இது ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ரியர் ஏசி வென்ட்ஸ், டைப்-சி சார்ஜிங் போர்ட், நான்கு பவர் விண்டோஸ் மற்றும் உயரத்தை சரிசெய்யக்கூடிய டிரைவர் சீட் ஆகியவற்றையும் பெறும்.
நியூ ஜெனரேஷன் ஸ்விஃப்ட் காரின் இன்ஜினில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இது 5-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஏஎம்டீ கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்ட 1.2 லிட்டர் என்ஏ பெட்ரோல் இன்ஜினுடன் இணைக்கப்படும். இந்த இன்ஜின் 88bhp பவரையும், 113Nm டோர்க் திறனையும் வெளிப்படுத்தும். மேலும், தற்போதைய ஜெனரேஷனைப் போலவே, வரவிருக்கும் ஸ்விஃப்ட்டிலும் மேனுவல் கியர்பாக்ஸுடன் ஃபேக்டரி-ஃபிட்டட் சிஎன்ஜி கிட் உடனும் வழங்கப்படும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்