- ஜூன் 4 ஆம் தேதி லான்ச் செய்யப்படலாம்
- இந்த நேரத்தில் அவற்றின் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது
மாருதி சுஸுகி தனது என்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் கார்களின் விற்பனையை அதிகரிக்க ஜூன் 4 ஆம் தேதி புதிய ஸ்பெஷல் எடிஷன்னை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த புதிய ஸ்பெஷல் எடிஷன் 'ட்ரீம் சீரிஸ்' என்று அழைக்கப்படும் மற்றும் ஆல்டோ k10, செலிரியோ மற்றும் எஸ்-பிரஸ்ஸோவுடன் ரூ. 4.99 லட்சம் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலையில் வழங்கப்படும். இதன் முன்பதிவு இன்று முதல் தொடங்கப்பட்டு, ஜூன் மாதம் முதல் இந்த ஸ்பெஷல் எடிஷன் குறைந்த எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் என்பது பெரிய செய்தி ஆகும்.
ட்ரீம் சீரிஸ் எடிஷன் ஸ்மார்ட்போன் கனெக்ட் உடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா மற்றும் குறைந்த வேரியன்ட்ஸில் சவுண்ட் சிஸ்டம் போன்ற அம்சங்களுடன் வரும். இருப்பினும், இந்த புதிய எடிஷன் இந்த அனைத்து ஹேட்ச்பேக்குகளின் என்ட்ரி-லெவல் வேரியன்ட்ஸின் அடிப்படையில் இருக்கும். தற்போது ஆல்டோ K10, எஸ்-பிரஸ்ஸோ மற்றும் செலிரியோ ஆகியவை முறையே ரூ. 3.99 லட்சம், ரூ. 4.26 லட்சம் மற்றும் ரூ. 5.36 லட்சம் ஆரம்ப விலையில் கிடைக்கின்றன.
ஏப்ரல் 2024 இல் இந்த மாடல்களின் விற்பனையைப் பற்றி நாம் பேசினால், இந்த இந்திய கார் உற்பத்தியாளர் ஆல்டோ மற்றும் எஸ்-பிரஸ்ஸோவின் 11,519 யூனிட்களை விற்பனை செய்து வெற்றி பெற்றுள்ளார். இந்த விற்பனை புள்ளிவிவரங்களில் சரிவு ஏற்பட்டுள்ளது மற்றும் ஏப்ரல் 2023 இல் இந்த மாடல்களின் 14,110 யூனிட்களை பிராண்ட் விற்பனை செய்துள்ளது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்