- 29 ஏப்ரல், 2024 அன்று லான்சாகும்
- டாப்-ஸ்பெக் வேரியன்ட்டில் ஏடாஸ் பெற வாய்புள்ளது
மஹிந்திரா இந்தியா தனது புதிய வரவான XUV 3XO ஐ நாட்டில் வரும் வாரத்தில் லான்ச் செய்ய உள்ளது, லான்ச்க்கு முன்பே இதன் பல அம்சங்கள், எக்ஸ்டீரியர் மாற்று மைலேஜ் பற்றிய விவரங்கள் வெளிவந்தன. இந்த கட்டுரையில் வரவிருக்கும் மஹிந்திரா XUV 3XOஇன் வேரியன்ட்ஸின் புதிய பெயர்களை பற்றி இதில் பார்போம்.
தற்போது விற்பனையில் உள்ள மஹிந்திரா XUV 300, W2, W4, W6, W8 மற்றும் W8 (O) ஆகிய ஐந்து வேரியன்ட்ஸில் கிடைக்கிறது. இருப்பினும், வரவிருக்கும் XUV 3XO அதன் உடன்பிறப்பான XUV700 இலிருந்து வேரியன்ட்ஸின் பெயரைப் பெறுகிறது. இது MX, AX, AX5 மற்றும் AX7 எல் (லக்சுரி பேக்) மற்றும் ப்ரோ வெர்ஷன்ஸுடன் டாப்-ஸ்பெக் வரியண்ட்ஸில் வழங்கப்படும்.
மஹிந்திரா XUV 3XOஒரு பூதம் புதிய கேபினைப் பெறும், இதில் 10.25 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், வயர்லெஸ் ஸ்மார்ட்ஃபோன் கனெக்ட்டிவிட்டி, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், 7 ஸ்பீக்கர் கொண்ட ஹர்மன்-கார்டன் சவுண்ட் சிஸ்டம், டூயல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் புதுப்பிக்கப்பட்ட சென்ட்ரல் கன்சோல் போன்ற அம்சங்கள் இருக்கும். இது தவிர, 360 டிகிரி சரவுண்ட் கேமரா, லேன் வாட்ச் கேமரா, ஃப்ரண்ட் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்ஸ், ஃப்ரண்ட் வென்டிலேடெட் சீட்ஸ், ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம்மற்றும் ஏடாஸும்வழங்கப்படலாம்.
தற்போதைய மாடலைப் போலவே, XUV 3XO இல் 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜினுடன் வழங்கப்படும். சமீபத்தில் பிராண்ட் மைலேஜ் மற்றும் இன்டீரியரை வெளிப்படுத்தும் புதிய டீசரை வெளியிட்டது. டீசரின் படி, இதன் இன்ஜின் ஏஆர்ஏஐ சான்றளிக்கப்பட்ட மைலேஜாக லிட்டருக்கு 20.1 கிமீ மற்றும் 4.5 வினாடிகளில் 0-60 கிமீ வேகத்தை எட்டும் ஒரு அற்புதமான பர்ஃபார்மன்ஸ்ஸை மஹிந்திரா XUV 3XO வழங்கும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்