- ஹூண்டாய் க்ரெட்டா N லைன் N ஃபேஸ்லிஃப்ட் இரண்டு வேரியன்ட்ஸில் வழங்கப்படும்
- 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படும்
ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் அறிமுகப்படுத்தப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, எஸ்யுவியின் N-லைன் பதிப்பின் பிரத்யேக விவரங்களைப் பெற்றுள்ளோம். இந்தியாவில் ஹூண்டாய் i20 N லைன் மற்றும் வென்யூN லைன்க்கு அடுத்து மூன்றாவது N லைன் மாடலாகும் மாறும் ஹூண்டாய் க்ரெட்டா.
க்ரெட்டாவின் இந்த மாடல் 158bhp மற்றும் 253Nm டோர்க்கை உருவாக்கும் 1.5 லிட்டர், டர்போ-பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படும். இந்த இன்ஜின் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் அல்லது செவன்-ஸ்பீட் டிசிடீ யூனிட்டுடன் வழங்கபடும்.
2024 ஹூண்டாய் க்ரெட்டா N லைன் N8 மற்றும் N10 என இரண்டு வேரியன்ட்ஸில் கிடைக்கும். டிசிடீ கியர்பாக்ஸ் MT மற்றும் N10 வேரியன்ட்ஸ்க்கு பிரத்தியேகமாக இருக்கும். மற்ற இடங்களில், க்ரெட்டா N லைனில் சிறிய காஸ்மெட்டிக் புதுப்பிப்புகளைப் பெறும் என்று எதிர்பார்க்கிறோம், மேலும் உட்புறத்திலும் சில தனித்துவமான அம்சங்களைப் பெறவும் வாய்ப்புள்ளது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்