- இந்தியர்களின் முதல் தேர்வாக எஸ்யுவி’ஸ் ஆகும்
- பட்ஜெட் கார்ஸ் விற்பனையில் 13% வளர்ச்சி கண்டது
பல ஆண்டுகளாக, இந்திய சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த வளர்ந்து வரும் வாகன மார்க்கெட்டில் பட்ஜெட் கார்ஸ் முக்கிய பங்கு வகிக்கின்றன. பிரிவுகளைப் பற்றி பேசுகையில், எஸ்யுவிஸ்க்கான தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த பிரிவில் கிடைக்கும் பல விருப்பங்களிலிருந்து இதை அளவிடலாம். நாட்டில் விற்கப்படும் 32% பஸ்சேன்ஜ்ர் வாகனங்கள் ரூ. 10-20 லட்சம் வாகனங்கள் ஆகும். 2020 நிதியாண்டில், இந்த எண்ணிக்கை 19% ஆக இருந்தது. அதாவது, கடந்த மூன்று ஆண்டுகளில் பட்ஜெட் கார்ஸின் விற்பனையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
எஸ்யுவிஸ் ஆதிக்கம் செலுத்துகின்றதா?
இந்த புள்ளிவிவரங்களின்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் இதே விலை ரேஞ்சில் வாகனங்களின் விற்பனை 13% அதிகரித்துள்ளது. இப்போது இந்த விலையில் அதிகம் வாங்கப்படும் வாகனங்கள் குறித்து கொஞ்சம் ஆய்வு செய்தால், இந்தியர்களின் விருப்பமான எஸ்யுவிஸ் இங்கு ஜெயித்திருப்பது தெரிந்தது. இந்த வகை விற்பனையில் எஸ்யுவிஸ் 74% ஆகும். ஜெட்டோ டைனமிக் இன் தரவுகளின்படி, ரூ. 10-20 லட்சம் விலை ரேஞ்சில் விற்கப்படும் பெரும்பாலான வாகனங்கள் எஸ்யுவிஸ் ஆகும், இதில் சில சிறிய எஸ்யுவிஸ், சில மைக்ரோ எஸ்யுவிஸ் மற்றும் சில ஆஃப்-ரோடர் எஸ்யுவிஸ் அடங்கும்.
இந்த வரம்பில் உள்ள விருப்பங்கள் என்ன?
இந்த பட்ஜெட்டில், மஹிந்திராவின் ஸ்கார்பியோ, XUV700, XUV400, பொலேரோ நியோ, தார், டாடாவின் ஹேரியர், சஃபாரி, நெக்ஸான் ஆகிய ஐசிஇ மற்றும் இவி வெர்ஷன்ஸ், எம்ஜி ஹெக்டர், ஃபோர்ஸ் மோட்டார்ஸ் கூர்கா, மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா, ஜிம்னி, ஃப்ரோன்க்ஸ், டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யுவிஸ் கிடைக்கின்றன.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்