- குளோபல் என்கேப் கிராஷ் டெஸ்ட்டின் புதிய முடிவுகள் வெளியிடப்பட்டன
- காரின் முழு பாதுகாப்பு மதிப்பீட்டையும் இது உள்ளடக்கியது
ஆப்பிரிக்க சந்தைகளில் விற்கப்படும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ரெனோ ட்ரைபர், சமீபத்தில் குளோபல் நியூ கார் அசெஸ்மென்ட் புரோகிராம் (ஜிஎன்கேப்) க்ராஷ் டெஸ்ட்டில் பங்கேற்றது. தகவல்களின்படி, இந்த எம்பீவி இரண்டு ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீட்டை மட்டுமே பெற்றுள்ளது. இப்போது இந்த கட்டுரையில் இதைப் பற்றி விரிவாகப் பேசுவோம்.
நான்கு ஸ்டார் ரேட்டிங்கிலிருந்து இரண்டு ஸ்டார் ரேட்டிங்க்கு தள்ளப்பட்டது
2021 ஆம் ஆண்டில், இது அடல்ட் சேஃப்டிக்கு நான்கு ஸ்டார் மதிப்பீட்டையும் சைல்ட் சேஃப்டியில் மூன்று ஸ்டார் மதிப்பீட்டையும் பெற்றது. டிரைவரின் தலை மற்றும் கழுத்துக்கு நல்ல பாதுகாப்பை வழங்கியது, ஆனால் ஃப்ரண்ட் மற்றும் சைட் இம்பேக்ட்டில் டிரைவரின் மார்புக்கான பாதுகாப்பு பலவீனமாக இருந்தது காணப்பட்டது. டம்மியின் தலை, கழுத்து மற்றும் மார்பின் பர்ஃபார்மன்ஸ் ஐசோஃபிக்ஸ் ஆங்கரேஜ்கள் இல்லாததால் சைல்ட் சேஃப்டியில் ஏமாற்றமளித்தது.
க்ராஷ் டெஸ்ட் மற்றும் அவற்றின் முக்கியத்துவம்
குளோபல் என்கேப் க்ராஷ் டெஸ்ட்டின் நெறிமுறைகள் இப்போது எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC) உட்பட அனைத்து வாகனங்களுக்கும் ஃப்ரண்டல் மற்றும் சைட் இம்பேக்ட் சேஃப்டியை சோதிக்கிறது. அதிக ஸ்டார் மதிப்பீடுகளைக் கொண்ட கார்களுக்கு, கூடுதல் டெஸ்ட்டில் பாதசாரி பாதுகாப்பு மற்றும் சைட் போல் இம்பேக்ட் ப்ரொடெக்க்ஷன் ஆகியவை அடங்கும்.
'சேஃபர் கார்ஸ் ஃபார் ஆப்பிரிக்கா' திட்டத்தின் கீழ் சமீபத்திய சோதனைகள் நடத்தப்பட்டன மற்றும் குறைந்த பாதுகாப்பு செயல்திறன் ஒரு முக்கிய கவலையாக வெளிப்பட்டுள்ளது. இந்த குறைந்த நட்சத்திர மதிப்பீடுகள் ஒரு எச்சரிக்கையாகவும், எதிர்காலத்தில் அடல்ட்ஸ், சைல்ட் மற்றும் பாதசாரிகளுக்கு பாதுகாப்பான கார்களை உருவாக்க ஊக்கமளிக்கும் என்றும் நம்புகிறோம்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்