- உற்பத்தி 2010 இல் தொடங்கியது
- சுமார் 10 லட்சம் யூனிட்ஸை எக்ஸ்போர்ட் செய்யப்பட்டுள்ளன
ரெனோ நிசான் ஆட்டோமோட்டிவ் பிரைவேட் லிமிடெட் (ஆர்என்ஏஐபிஎல்) இந்தியாவில் 2010 இல் உற்பத்தியைத் தொடங்கியது, இப்போது அது 2.5 மில்லியன் வாகனங்களை உருவாக்கியுள்ளது. இந்த பிராண்டின் உற்பத்தி ஆலை சென்னை ஒரகடம் நகரில் 600 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ரெனோ-நிசான் கூட்டணியின் கடந்த 13 ஆண்டுகளில், ஒவ்வொரு ஆண்டும் 1.92 லட்சம் யூனிட்ஸை உற்பத்தி செய்துள்ளது, அதாவது ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கும் ஒரு கார் தயாரிக்கப்பட்டது. மேலும், இந்த பிராண்ட் மிடில் ஈஸ்ட் கன்ட்ரிஸ், ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற 108 நாடுகளுக்கு சுமார் பத்து லட்சம் யூனிட்ஸை ஏற்றுமதி செய்துள்ளது.
ரெனோ நிசான் சாதனை பற்றிய அறிக்கை
ஆர்என்ஏஐபிஎல் யின் நிர்வாக இயக்குனரான கீர்த்தி பிரகாஷ், “எங்கள் தயாரிப்புகள் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது, இதன் காரணமாக நாங்கள் 2.5 மில்லியன் கார்ஸை உற்பத்தி செய்து முடித்துள்ளோம். இந்த சாதனைக்காக எங்கள் ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் விரைவில் ஆறு புதிய மாடல்ஸை வெளியிட உள்ளோம், அவற்றில் மூன்று ரெனோ மற்றும் மூன்று நிசான் ஆகும். இந்த தயாரிப்புகள் வாடிக்கையாளர்களால் விரும்பப்படும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” என்று கூறியுள்ளார்.
ரெனோ நிசான் இந்தியாவிற்காக ஆறு புதிய கார்ஸை அறிவித்துள்ளது
ரெனோ நிசான் கூட்டணி விரைவில் இந்தியாவில் ஆறு புதிய மாடல்ஸை அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தது. இதில் நான்கு சி-செக்மென்ட்எஸ்யுவிஸ் மற்றும் இரண்டு ஏ-செக்மென்ட்எலக்ட்ரிக் கார்ஸ் அடங்கும். இவை இரண்டு நிறுவனங்களின் முதல் எலக்ட்ரிக் காராக இருக்கும். ஐரோப்பாவில் டாசியா ஸ்பிரிங் என்று அழைக்கப்படும் ரெனோ க்விட் இவி, 2024 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்படலாம்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்