- இந்திய போர்ட்ஃபோலியோவில் க்விட், கைகர் மற்றும் ட்ரைபர் ஆகியவை அடங்கும்
- ரெனோ நாடு முழுவதும் 450 ஷோரூம்ஸ் மற்றும் 530 சர்வீஸ் சென்டர்ஸைக் கொண்டுள்ளது
அறிமுகம்
நாட்டில் ரெனோ நிறுவனம் 9 லட்சம் வாகனங்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இந்த எண்ணிக்கையை அடைய நிறுவன த்திற்கு11 ஆண்டுகள் ஆனது. ரெனோவின் தற்போதைய வரிசையில் க்விட், கைகர் மற்றும் ட்ரைபர் ஆகியவை அடங்கும். ரெனோ நிறுவனம் புதிய டஸ்டர்ரை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.
ரெனோ எப்போது தொடங்கியது?
ரேனோ-நிசான் கூட்டணியின் கீழ் 2008 ஆம் ஆண்டில் நாட்டில் அறிமுகமான ரேனோ, 2010 ஆம் ஆண்டில் தமிழக அரசைச் சந்தித்த பிறகு சென்னையில் தனது ஆலையை நிறுவியது. மேலும் ஆட்டோ எக்ஸ்போ 2012 இல், ரேனோ இந்திய மார்க்கெட்டுக்கு பல்ஸ் மற்றும் டஸ்டர்ரை அறிமுகப்படுத்தியது.
ஒன்பது லட்சம் யூனிட் விற்பனை எண்ணிக்கையை ரேனோ எவ்வாறு அடைந்தது?
எங்கள் வலுவான தயாரிப்பு, வாடிக்கையாளரின் ஈடுபாடு, நெட்வொர்க்கின் விரிவாக்கம், கிராமப்புறங்களில் கவனம் செலுத்துதல் மற்றும் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப திட்டங்களை செயல்படுத்துதல் ஆகியவை இந்த சாதனையை எட்டுவதற்கு நிறைய பங்களித்துள்ளன என்று நிறுவனம் கூறியது. தற்போது, நாடு முழுவதும் 450 ஷோரூம்ஸ் மற்றும் 530 சர்வீஸ் சென்டர்ஸ் ரேனோ முன்னிலையில் உள்ளது.
ரேனோ இந்தியா நிறுவனத்தின் சிஇஓ மற்றும் மேனேஜிங் டைரக்டர் வெங்கட்ராம் மாமில்லபல்லே, “இந்தியாவில் ஒன்பது லட்சம் விற்பனையை கடந்ததில் நாங்கள் மிகவும் பெருமையடைகிறோம். இது எங்களுக்கு ஒரு நல்ல தருணம். எங்கள் வாடிக்கையாளர்களின் அன்பு இல்லாமல் இந்த இலக்கு சாத்தியமில்லை” என்று கூறினார்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்