- இதில் கைகர் 1 மில்லியன் மாடல் ஆக உள்ளது
- சமீபத்தில் ஒன்பது லட்சம் யூனிட்ஸ் விற்பனை செய்து இலக்கை எட்டியது
ரெனோ இந்தியாவில் 10 லட்சம் யூனிட் உற்பத்தி செய்து இலக்கை எட்டியது. 1 மில்லியன் மாடலை ரெட்-நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டது கைகர், இது சென்னையில் உள்ள பிராண்டிலிருந்து வெளிவந்தது. உற்பத்தி ஆலையின் ஆண்டு உற்பத்தி திறன் 4,80,000 யூனிட்ஸ், இது இந்த சாதனையை அடைய உதவியது.
இந்தியாவில் ரெனோவின் போர்ட்ஃபோலியோ:
தற்போது, உற்பத்தியாளர் க்விட், கைகர் மற்றும் ட்ரைபர் உள்ளிட்ட மூன்று பஸ்சேன்ஜ்ர் கார்ஸை இந்தியாவில் விற்பனை செய்கிறது. இது எஸ்ஏஏஆர்சி, ஏஷியா பசிஃபிக், இந்தியன் ஓஷன் ரீஜியன், சவுத் ஆஃப்ரிக்கா மற்றும் ஈஸ்ட் ஆஃப்ரிக்கா பகுதிகளில் உள்ள 14 நாடுகளுக்கு இந்த வாகனங்களை ஏற்றுமதி செய்கிறது.
10 லட்சம் யூனிட் உற்பத்தி மைல்ஸ்டோனை குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை:
இந்நிகழ்ச்சியில் பேசிய ரெனோ இந்தியா ஆபரேஷன்ஸின் கன்ட்ரி சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குநர் வெங்கட்ராம் மாமில்லபள்ளே, “இந்தியாவில் 10,00,000 வாகனங்கள் உற்பத்தியை எட்டுவது ரெனோ நிறுவனத்திற்கு குறிப்பிடத்தக்க சாதனை ஆகும். இது இந்திய மார்க்கெட்டில் எங்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது மற்றும் எங்கள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. இந்த குறிப்பிடத்தக்க பயணத்திற்கு பங்களித்த எங்கள் வாடிக்கையாளர்கள், டீலர் பார்ட்னர்ஸ், ஊழியர்கள் மற்றும் அனைத்து பங்குதாரர்களுக்கும் நாங்கள் ஆழ்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் தொடர்ந்து சிறந்து விளங்க முயற்சிப்போம் மற்றும் எங்கள் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை மீறும் அற்புதமான தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவோம்.' என்று கூறினார்.
ரெனோ இந்தியாவில் 9 லட்சம் யூனிட் விற்பனை செய்து சாதனை படைத்தது:
சில வாரங்களுக்கு முன்பு, இந்தியாவில் ஒன்பது லட்சம் யூனிட்ஸ் என்ற ஒட்டுமொத்த விற்பனை மைல்ஸ்டோனை எட்டியதாக வாகன உற்பத்தியாளர் அறிவித்தார். நாட்டில் செயல்பட்டு 11 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்