- சிங்கிள் வேரியண்ட்டில் வழங்கப்படுகிறது
- செப்டம்பர் 2023 முதல் டெலிவரி தொடங்கும்
கடந்த வாரம், லேண்ட் ரோவர் இந்தியா 2024 ரேஞ்ச் ரோவர் வேலருக்கான முன்பதிவுகளை நாட்டில் தொடங்கியது. வாகன உற்பத்தியாளர் இந்தியாவில் எஸ்யுவியை ரூ.93 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) அறிமுகப்படுத்தியுள்ளார். ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட வேலர், செப்டம்பர் 2023 இல் தொடங்கும் டெலிவரிஸுடன் இரண்டு இன்ஜின் விருப்பங்களில் சிங்கிள், ஃபுல்லி-லோடெட் வேரியண்ட்டில் வழங்கப்படும்.
வேலர் ஃபேஸ்லிஃப்ட் டிசைன் மற்றும் எக்ஸ்டீரியர்
எக்ஸ்டீரியரில், வேலர் ஃபேஸ்லிஃப்ட் புதிய பிக்சல் எல்இடி ஹெட்லேம்ப்ஸுடன் ட்வீக் செய்யப்பட்ட டிஆர்எல்ஸ், ஃப்ளேர்ட் வீல் அர்ச்செஸ், ரேப்-அரவுண்ட் டெயில்லேம்ப்ஸ் மற்றும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட டெயில்லேம்ப் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. புதிதாக வடிவமைக்கப்பட்ட அலோய் வீல்ஸைத் தவிர, இந்த வீல்ஸ் ஏற்கனவே இருக்கும் மாடலைப் போல் உள்ளது.
2024 வேலர் இன்டீரியர் மற்றும் ஃபீச்சர்ஸ்
இன்டீரியரில், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, ஏர் ப்யூரிஃபையர், வயர்லெஸ் சார்ஜர் மற்றும் ஆக்டிவ் ரோடு நோய்ஸ் கேன்சலேஷன் டெக்னாலஜி கொண்ட புதிய 11.4 இன்ச் வளைந்த டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை ஃபேஸ்லிஃப்ட் வேலரின் சிறப்பம்சங்கள் ஆகும். கூடுதலாக, வாடிக்கையாளர்கள் இன்டீரியர் தீம் மற்றும் லெதர் அப்ஹோல்ஸ்டரியை கேரவே மற்றும் டீப் கார்னெட் ஆகிய இரண்டு வெவ்வேறு வண்ணங்களில் தேர்வு செய்யலாம்,. இது தவிர, சென்டர் கன்சோல் இப்போது புதிய ஸ்டோரேஜ் இடத்தால் மாற்றப்பட்டுள்ளது, மேலும் டயல் மூலம் அணுகக்கூடிய டெர்ரன் ரெஸ்பான்ஸ் சிஸ்டம் இப்போது இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன்க்கு மாற்றப்பட்டுள்ளது.
ரேஞ்ச் ரோவர் வேலர் ஃபேஸ்லிஃப்ட் இன்ஜின் மற்றும் விவரக்குறிப்புகள்
ரேஞ்ச் ரோவர் வேலரின் 2024 ஐ 2.0-லிட்டர் டீசல் அல்லது 2.0-லிட்டர் பெட்ரோல் இன்ஜினில் இருக்கலாம். முன்பு இது 201bhp மற்றும் 430Nm டோர்க்கை மற்றும் இது 8.3 வினாடிகளில் 0-100 கி.மீ வரை ஆக்ஸிலரேட் ஆகிறது, அதே சமயம் இந்த மாடல், 296bhp மற்றும் 400Nm டோர்க்கை உருவாக்குகிறது மற்றும் 0-100 கி.மீயை 5 வினாடிகளில் ஆக்ஸிலரேட் செய்யும். டிரான்ஸ்மிஷன் விருப்பம் டெர்ரன் ரெஸ்பான்ஸ் 2 சிஸ்டத்துடன் இணைந்து எயிட்-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் யூனிட் வரையறுக்கப்பட்டுள்ளது.
2024 ரேஞ்ச் ரோவர் வேலர் போட்டியாளர்கள்
வேலர் லக்சுரி எஸ்யுவி ஜாகுவார் எஃப்-பேஸ் மற்றும் போர்ஷே மேகன் உடன் போட்டியிடுகிறது.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்