- நவம்பர் 6, 2024 அன்று அறிமுகமாகும்
- டாடா நெக்ஸான் மற்றும் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா உடன் போட்டியிடும்
ஸ்கோடா இந்தியா தனது புதிய தயாரிப்பான கைலாக் எஸ்யுவியை தீவிரமாக சோதனை செய்து வருகிறது. இந்த சப்-ஃபோர் மீட்டர் எஸ்யுவிநவம்பர் முதல் வாரத்தில் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இதற்கு முன்னதாக, கைலாக்கின் ப்ரொடக்ஷன்-ரெடி மாடல்அதன் டெஸ்டிங்கில் சமீபத்தில் தென்ப்பட்டது.
கைலாக் பிராண்டின் 1.0-லிட்டர் டிஎஸ்ஐபெட்ரோல் இன்ஜினைப் பயன்படுத்தும். இதே மோட்டார் குஷாக் எஸ்யுவியில் 114bhp மற்றும் 178Nm பீக் டோர்க் வெளியீட்டைக் கொண்டுள்ளது. டிரான்ஸ்மிஷன் விருப்பங்களைப் பொறுத்தவரை, கைலாக் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் இந்த இன்ஜினுடன் இணைக்கப்பட்ட ஆட்டோமேட்டிக் டோர்க் கன்வர்டர் கியர்பாக்ஸைப் பெறும்.
புகைபடத்திலும் முந்தைய டீஸர்களிலும் தெரியும்படி, புதிய கைலாக் அதன் உடன்பிறந்த குஷாக்கிடமிருந்து ஸ்பிளிட் எல்இடி ஹெட்லேம்ப்ஸ், செங்குத்து ஸ்லேட்டுகளுடன் கூடிய கிரில்லைச் சுற்றியிருக்கும் ஸ்லீக் எல்இடி டிஆர்எல்கள், அப்ரைட் பானட், ரூஃப் ரெயில்ஸ் மற்றும் எலக்ட்ரிக் சன்ரூஃப் ஆகிய சில வடிவமைப்பு சிறப்பம்சங்களைப் பெறும்.
ஸ்கோடாகைலாக்கில்ஒரு பெரிய இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்ட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், ஆம்பியன்ட் லைட்டிங், ஆட்டோமேடிக் க்ளைமேட் கன்ட்ரோல், 360-டிகிரி சரவுண்ட் கேமரா, வயர்லெஸ் சார்ஜர், ரியர் ஏசி வென்ட்ஸ் மற்றும் வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸ் ஆகியவற்றைக் கொண்ட கேபின் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அறிமுகமானதும், புதிய கைலாக் ஆனது டாடாநெக்ஸான், மாருதி பிரெஸ்ஸா, கியா சோனெட், ஹூண்டாய் வென்யூ, சிட்ரோன் பஸால்ட், மஹிந்திரா XUV 3XO மற்றும் வரவிருக்கும் நிசான் மேக்னைட் போன்றவற்றுடன் போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்