- 5-டோர் தார் இந்தியாவில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும்
- டூயல்-பேன் சன்ரூஃப் உடன் கிடைக்கும்
மஹிந்திரா தார் 5-டோர் பற்றிய புதிய விவரங்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடைபெறவிருக்கும் அதன் விலை அறிவிப்புக்கு முன்னதாக, காரின் டெஸ்ட் யூனிட் ப்ரொடக்ஷன்-ரெடி உள்ள அவதாரத்தில் தென்ப்பட்டது.
இங்குள்ள படங்களில் காணப்படுவது போல், தார் 5-டோர் டெஸ்ட் மாடல் முற்றிலும் முடப்ப்ட்டிருந்தது. ரெட் மற்றும் பிளாக் உள்ளிட்ட லைஃப்ஸ்டைல் எஸ்யுவியின் வரவிருக்கும் மறு செய்கையின் வண்ண விருப்பங்களில் உள்ள இடைவெளிகள் நமக்கு ஒரு பார்வையைத் தருகின்றன. துவக்கத்தில் குறைந்தபட்சம் ஐந்து முதல் ஆறு வண்ண விருப்பங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்த காரில் காணப்படும் முக்கிய விவரங்கள் வட்ட வடிவ எல்இடி டிஆர்எல் ஹெட்லேம்ப், புதிய மல்டி-ஸ்லாட் கிரில், சைட் ஸ்டெப்ஸ், அதன் த்ரீ-டோர் வெர்ஷனிலிருந்து ஃபெண்டரிடமிருந்து கடன் வாங்கிய அலோய் வீல்களுக்கான டூயல்-டோன் கார்னிஷ் ஆகியவை அடங்கும். ஃபெண்டாரில்-பொருதப்பட்ட டர்ன் இண்டிகேட்டர்ஸ், பிளாஸ்டிக் கிளாடிங், புதிய எல்இடி டெயில்லைட்ஸ் மற்றும் டெயில்கேட்டில் பொருத்தப்பட்ட ஸ்பேர் டயருக்கான கவர்.
இன்டீரியரில், 2024 தார் 5-டோர் பெரிய டச்ஸ்கிரீன் யூனிட், டூயல்-பேன் சன்ரூஃப் (குறைந்த வேரியன்ட்ஸில் சிங்கிள்-பேன் யூனிட்), ஃப்ரண்ட் ஆர்ம்ரெஸ்ட், யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட்ஸ், பி-பில்லரில் பொருத்தப்பட்ட ரியர் டோர் ஹேண்டல்ஸ்,டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஆகியவற்றைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
3-டோர் வெர்ஷனைப் போலவே, 5-door மஹிந்திரா தார் 2.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 2.2-லிட்டர் டீசல் இன்ஜின்களுடன் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் இணைக்கப்படும். ஃபோர்ஸ் கூர்கா 5-டோர் உடன் போட்டியிடுவதைத் தவிர, இது ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா, கியா செல்டோஸ், ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் எம்ஜி ஆஸ்டர் போன்ற மிட்-சைஸ் எஸ்யுவிகளுக்கு எதிராகவும் போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்