- இந்த வெர்ஷனை தார் அர்மடா என்றும் அழைக்கலாம்
- இது ஹார்ட்-டாப் பாடி ஸ்டைலில் மட்டுமே கிடைக்கும்
மஹிந்திரா தனது ஃபைவ் டோர் தார் ஐ இந்தியாவில் தொடர்ந்து டெஸ்ட் செய்து வருகிறது, இது இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும். இந்த புதிய ஸ்பை படங்கள் அதன் ப்ரொடக்ஷன் ரெடியான டெஸ்ட் மாடலின் புதிய யூனிட்டைப் பற்றிய தகவலை எங்களுக்கு வழங்கியுள்ளன, அதை நாங்கள் இந்த கட்டுரையில் விவரிக்கப் போகிறோம்.
இங்குள்ள படங்களில் காணக்கூடியது போல், புதிய ஃபைவ் டோர் மஹிந்திரா தார் புதிய டூயல்-டோன் அலோய் வீல்கள், ரியர் வைப்பர் மற்றும் வாஷர் ஆகியவற்றைப் பெறும். இது 10.25 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பையும் கொண்டிருக்கும், இது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட XUV 3XO இலிருந்து எடுக்கப்படும். முந்தைய டெஸ்ட் மாடல்ஸ், லைஃப்ஸ்டைல் எஸ்யுவி ஹார்ட்-டாப் பாடி ஸ்டைலில் மட்டுமே வரும் என்பதை வெளிப்படுத்தியுள்ளன, அதே நேரத்தில் த்ரீ-டோர் வெர்ஷன் கன்வெர்ட்டிபிள்-டாப் விருப்பத்தையும் பெறுகின்றன.
2024 தார் ஃபைவ் டோரில் புதிய கிரில், பெரிய வீல்பேஸ், புதிய ஃப்ரண்ட் மற்றும் ரியர் பம்ப்பர்கள் மற்றும் எல்இடி டெயில்லைட்கள் உட்பட பல மாற்றங்களைப் பெறும், இது தற்போதைய வெர்ஷனிலிருந்து அதன் தோற்றத்தை வேறுபடுத்தும். இன்டீரியரில், இந்த மாடல் சிங்கிள்-பேன் சன்ரூஃப், ரியர் ஏசி வென்ட்ஸ், ஃபுல்லி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், இன்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஆகியவற்றைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரவிருக்கும் தாரில் 2.0 லிட்டர் எம்ஸ்டாலியன் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மற்றும் 2.2 லிட்டர் எம்ஹாவ்க் டீசல் இன்ஜினிலும் வழங்கப்படலாம். இந்த இன்ஜின்கள் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டோர்க் கன்வர்டர் யூனிட்டுடன் இணைக்கப்படும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்