- சண்டிகர் மாநிலத்தில் மஹிந்திரா தார் விலை குறைவாக உள்ளது
- பெட்ரோல் மற்றும் இன்ஜின் வேரியண்ட்ஸில் கிடைக்கும்
இந்திய வாடிக்கையாளர்கள் ஹேட்ச்பேக் மற்றும் செடான் கார்ஸை விட எஸ்யுவி மற்றும் ஆஃப்-ரோடு வாகனங்களை அதிகமாக விரும்புகிறார்கள். இந்த வாகனம் இந்திய சாலைகளில் பர்ஃபார்மன்ஸ் அடிப்படையில் மிகவும் திறமையான மற்றும் வசதியானவை என்பதை நிரூபிக்கின்றன. மஹிந்திரா தார் பல எஸ்யுவி விருப்பங்களில் வலுவான மற்றும் மிகவும் பிரபலமான கார் ஆகும். மஹிந்திரா தாரின் காத்திருப்பு காலம் 4 மாதங்கள் இருப்பதற்கு இதுவே ஒரு காரணம். டாப் 10 நகரங்களில் உள்ள மஹிந்திரா தாரின் விலை கீழே கொடுக்கப்பட்டுள்ளது
நகர்ம் | பேஸ் வேரியண்ட்டின் விலை | டாப் வேரியண்ட்டின் விலை |
லக்னோ | ரூ. 12.41 லட்சம் | ரூ. 19.38 லட்சம் |
பாட்னா | ரூ. 12.32 லட்சம் | ரூ. 20.04 லட்சம் |
சண்டிகர் | ரூ. 11.75 லட்சம் | ரூ. 19.03 லட்சம் |
ராஞ்சி | ரூ. 11.99 லட்சம் | ரூ. 19.54 லட்சம் |
குவாஹாட்டி | ரூ. 11.90 லட்சம் | ரூ. 19.37 லட்சம் |
டெல்லி | ரூ. 12.86 லட்சம் | ரூ. 20.20 லட்சம் |
ஹைதராபாத் | ரூ. 13.07 லட்சம் | ரூ. 20.90 லட்சம் |
மும்பை | ரூ. 12.73 லட்சம் | ரூ. 20.34 லட்சம் |
கொல்கத்தா | ரூ. 12.33 லட்சம் | ரூ. 19.72 லட்சம் |
ஜெய்ப்பூர் | ரூ. 12.43 லட்சம் | ரூ. 20.04 லட்சம் |
மஹிந்திரா தார் 4X4 பதிப்பு 2.2 லிட்டர் டீசல் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இரண்டு இன்ஜின்களும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், இது 1.5 லிட்டர் டீசல் இன்ஜினைக் கொண்டுள்ளது, இது 117bhp மற்றும் 300Nm டோர்க்கை உருவாக்குகிறது.
மஹிந்திரா சமீபத்தில் இந்த இன்ஜின்களுக்கு BS6 ஃபேஸ் 2 அப்டேட்டை வழங்கியுள்ளது, இதன் காரணமாக அவற்றின் விலை ரூ.1.05 லட்சம் வரை அதிகரித்துள்ளது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்