- ரூ.75,000 வரை கேஷ் தள்ளுபடி
- ஃபேஸ்லிஃப்ட் எடிஷன் அக்டோபர் 17 அன்று லான்ச் செய்யப்பட்டது
டாடா மோட்டார்ஸ் அக்டோபர் 17, 2023 அன்று இந்தியாவில் புதிய ஹேரியருடன் சஃபாரி ஃபேஸ்லிஃப்டை அறிமுகப்படுத்தியது. இரண்டு எஸ்யுவிஸும் புதிய பெயர்களுடன் எக்ஸ்டீரியர் மற்றும் இன்டீரியர் புதுப்பிக்கப்பட்டுள்ளன. அதேசமயம், ஃபேஸ்லிஃப்ட்க்கு முந்தைய வெர்ஷன் நவம்பர் மாதத்தில் பெரிய தள்ளுபடியுடன் வழங்கப்படுகின்றன.
ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் டாடா சஃபாரி மற்றும் ஹேரியர் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1.40 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில் ரூ.75,000 வரை கேஷ் தள்ளுபடி, ரூ.50,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.15,000 வரை கார்ப்பரேட் தள்ளுபடி வடிவத்தில் வழங்கப்படுகின்றன. கூடுதலாக, டீலர்கள் பழைய கார்ஸை விற்க பெரும் தள்ளுபடியையும் கொடுக்கலாம். இதைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அருகிலுள்ள டீலரைத் தொடர்பு கொள்ளலாம்.
ஃபேஸ்லிஃப்ட் எடிஷனின் அம்சங்கள் மற்றும் டிசைன் மேம்படுத்தப்பட்டாலும், அதன் இன்ஜினில் எந்த மாற்றமும் இல்லை. முன்பு போலவே, இது அதே BS6 2.0-இணக்கமான 2.0-லிட்டர் க்ரியோடெக் டீசல் இன்ஜினைக் கொண்டுள்ளது, இது 168bhp மற்றும் 350Nm டோர்க்கையும் உருவாக்குகிறது. சிக்ஸ் ஸ்பீட் மேனுவல் மற்றும் டோர்க் கன்வர்டர் யூனிட்டுடன் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்