- கரேரா மற்றும் அதன் GTS மாடல் லான்சானது
- புதிய ஹைப்ரிட் தொழில்நுட்பத்தைக் பெறுகிறது
புதிய 911 கரேரா மற்றும் கரேரா 4 GTS மாடல்களுக்கான முன்பதிவுகளை போர்ஷே இந்தியா தொடங்கியுள்ளது. 911 கரேராவின் விலை ரூ. 1.99 கோடி (எக்ஸ்-ஷோரூம்), கேரேரா 4GTS மாடலின் விலை ரூ. 2.75 கோடி (எக்ஸ்-ஷோரூம்) என்று உங்களுக்குத் தெரிவிக்கிறோம்.
கார் தயாரிப்பாளர் நேற்று அதாவது மே 29 அன்று தனது முதல் ஹைப்ரிட் 911 ஐ அறிமுகப்படுத்தியது, இப்போது அதன் இந்திய பதிப்பு 911 கரேரா ரேஞ்சையும் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், புதிய லூக், சிறந்த இன்டீரியர், சிறந்த ஹேன்டலிங் மற்றும் அதிக ஆற்றல் கொண்ட இந்த கார்களின் டெலிவரியும் இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கும்.
புதிய போர்ஷே 911 கரேராவின் இன்ஜின் எவ்வளவு சக்தி வாய்ந்தது?
புதிய 911 கரேரா மற்றும் 911 கரேரா 4 GTS மாடல்கள் புதிய 3.6 லிட்டர் பிளாட்-சிக்ஸ் இன்ஜினைக் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் தோராயமாக 478bhp பவரையும், 570Nm டோர்க் திறனையும் உருவாக்குகிறது. சுவாரஸ்யமாக, ஹைப்ரிட் டெக்னாலஜி கார் தயாரிப்பாளருக்கு இரண்டு யூனிட்டுகளுக்குப் பதிலாக சிங்கிள் எலக்ட்ரிக் டர்போசார்ஜரை அறிமுகப்படுத்த உதவியது. இந்த ஹைபிரிடானது செவென்த் ஜெனரேஷன் 911 இன் மிட்-சைக்கிள் தயாரிப்பின் ஒரு பகுதியாகும், இது சுமார் 526bhp மற்றும் 610Nm டோர்க்கை உருவாக்க உதவுகிறது. ஸ்டாண்டர்ட் 911 மாடல்கள் டூயல்-டர்போவுடன் 3.0 லிட்டர் பிளாட்-சிக்ஸ் இன்ஜினுடன் வருகின்றன.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்