- இந்த காரை கோல்ட்ஃபினிஷில் வாங்கியுள்ளார்
- மகேஷ் பாபு கடந்த ஆண்டு ஆடி இ-ட்ரானை வாங்கினார்
தெலுங்கு திரையுலகின் பெரிய சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபு சமீபத்தில் புத்தம் புதிய லக்சுரி கார் ரேஞ்ச் ரோவர் SV யை வாங்கியுள்ளார். மகேஷ் பாபு இந்த காரை 5.4 கோடி விலையில் வாங்கியுள்ளார். அவர் இந்த காரை கோல்ட் நிறத்தில் தேர்வு செய்துள்ளார், இதன் காரணமாக அவர் ஹைதராபாத்தில் கோல்ட் நிற ரேஞ்ச் ரோவரின் ஒரே உரிமையாளராகிவிட்டார் என்பதை உங்களுக்கு தெரிவிக்கிறோம்.
மகேஷ் பாபுவின் கார் கலெக்ஷன்ஸ்
மகேஷ் பாபு ஏற்கனவே பல லக்சுரி வாகனங்களை வைத்துள்ளார். இவர் கடந்த ஆண்டு புதிய ஆடி இ-ட்ரானை ரூ.1.19 கோடிக்கு வாங்கினார். இது தவிர, ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், ரேஞ்ச் ரோவர் வோக், ஆடி A7, பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-கிளாஸ் போன்ற கார்ஸை வைத்துள்ளார். மோகன்லால், ஜூனியர் என்டிஆர் மற்றும் சிரஞ்சீவி போன்ற பெரிய பெயர்களை உள்ளடக்கிய பிரபலங்களின் விருப்பமான கார் ரேஞ்ச் ரோவர் ஆக வளரந்து வருகிறது. சமீபத்தில், இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானும் புதிய ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராஃபியை வாங்கினார்.
ரேஞ்சர் ரோவர் காரின் சிறப்பு என்ன?
ரேஞ்ச் ரோவர் வாகனங்கள் லக்சுரி ஃபீல், ரோடு ப்ரெசென்ஸ் மற்றும் பர்ஃபார்மன்ஸ்க்காக அறியப்படுகின்றது. மகேஷ் பாபு வாங்கிய ரேஞ்ச் ரோவர் SV 3.0 லிட்டர் டீசல் மற்றும் 4.4 லிட்டர் பெட்ரோல் என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்ஸுடன் வருகிறது. இதன் 3.0 லிட்டர் இன்ஜின் 346bhp பவரையும் 700nm டோர்க்கையும் உருவாக்குகிறது, அதே நேரத்தில் 4.4 லிட்டர் இன்ஜின் 523bhp பவரையும் 750nm டோர்க்கையும் உற்பத்தி செய்கிறது. இரண்டு இன்ஜின்ஸும் பேடில் ஷிஃப்டர்ஸுடன் எய்ட்-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. 4.4 லிட்டர் இன்ஜின் அதிகபட்ச ஸ்பீடாக ஒரு மணி நேரத்திற்கு 250 கி.மீ மற்றும் 0 முதல் 100 கி,மீ ஸ்பீடை 4.6 வினாடிகளில் அடையும்.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்