- மும்பையிலிருந்து ராய்கட்க்கு 20 நிமிடங்களில் அடையலாம்
- இதுதான் இந்தியாவின் மிக நீளமான கடல் பாலம் ஆகும்
மும்பை டிரான்ஸ் ஹார்பர் லிங்க் (எம்டிஎச்எல்) பிரதமர் நரேந்திர மோடி நாளை அதாவது ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். இது நாட்டின் மிக நீளமான கடல் பாலமாக இருக்கும், இது சிவ்ரி மற்றும் நவா-ஷேவாவை இணைக்கும் பாலமாகும். இந்த பாலத்தின் பெயர் அடல் பிஹாரி வாஜ்பாய் சிவ்ரி-நவா ஷேவா அடல் சேது, இது நாளை மாலை 3.30 மணியளவில் பிரதமரால் திறந்து வைக்கப்படும்.
அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, அடல் சேது 21.8 கிமீ நீளம் கொண்ட பாலமாக ஆறு வழித்தடங்கள் மற்றும் அதன் கட்டுமானத்திற்காக சுமார் 18,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதை உருவாக்க ஐந்து வருடங்கள் ஆனது என்று சொல்லலாம். இந்த பாலம் தொடங்கப்பட்ட பிறகு, நவி மும்பையில் இருந்து மும்பையை அடைய 20 நிமிடங்கள் மட்டுமே ஆகும், இது முன்பு 2 மணி நேரம் ஆகும்.
அடல் சேதுவில் அதிகபட்ச வேகம் மணிக்கு 100 கிலோமீட்டராக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் இரு சக்கர வாகனங்கள், ஆட்டோரிக்ஷாக்கள் மற்றும் டிராக்டர்கள் இந்த பாலத்தில் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர முதல்வரான ஏக்நாத் ஷிண்டே, 'மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைப்பை பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 12 ஆம் தேதி திறந்து வைக்கிறார். இதனால் பாலத்திற்கு அருகில் உள்ள பகுதிகளில் பொருளாதார வளர்ச்சி ஏற்படும்' என்று அவர் கூறினார்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்