- தற்போது ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 7.50 கோடி
- இது 0-100 கிமீ வேகத்தை வெறும் 4.5 வினாடிகளில் எட்டும்
RRR படத்திற்குப் பிறகு, பான்-இந்தியன் ஸ்டார் ராம் சரண் பெயர் நாடு முழுவதும் பிரபலமாகிவிட்டது. இப்பெயரைத் தெரியாதவர்கள் யாரும் இல்லை. ராம் சரண் என்றால் சினிமாவில் மட்டும் அல்ல, சொகுசு கார்கள் மீது அவருக்கு இருந்த காதல் அனைவருக்கும் நினைவிருக்கிறது. இப்போது வரை, இந்த ஹீரோவின் கேரேஜில் வெவ்வேறு பிராண்டுகளின் விலையுயர்ந்த சொகுசு கார்கள் உள்ளன. சமீபத்தில், பிரிட்டிஷ் சொகுசு கார் நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் தயாரித்த பிளாக் நிற ஸ்பெக்டர் காரில் ராம் சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா விமான நிலையத்தில் காணப்பட்டனர். இருப்பினும், இந்த கட்டுரையின் மூலம் ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் காரின் விலை, டாப்-ஸ்பீட் மற்றும் முக்கிய அம்சங்கள் பற்றிய முழு விவரங்களை இதில் அறிந்துகொள்வோம்.
பிரிட்டிஷ் சொகுசு வாகன தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் இந்தியாவில் தனது முதல் எலக்ட்ரிக் கார் ஸ்பெக்டரை ரூ. 7.50 கோடி (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்கப்படுகின்றன. இந்த சொகுசு கார் சிங்கிள் ஃபுல்லி லோடெட் வேரியண்ட்ஸில் கிடைக்கிறது.
காரின் ஃப்ரண்ட் டிசைன் பற்றி பேசுகையில், ஸ்பெக்டர் ஸ்பிரிட் ஆஃப் எக்ஸ்டஸி, ஸ்ப்ளிட் எல்இடி ஹெட்லேம்ப்ஸ், சாய்வான ரூஃபுடன் கூடிய ஐகானிக் இல்லுமினேட்டட் பாந்தியோன் ஃப்ரண்ட் கிரிலில் செங்குத்தாக அடுக்கப்பட்ட எல்இடி டெயில்லேம்ப்ஸ் மற்றும் 21-இன்ச் ஏரோ-டிசைன் அலோய் வீல்ஸ் போன்ற அம்சங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இன்டீரியரில், வயர்லெஸ் மொபைல் இணைப்புடன் கூடிய பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஃபுல்லி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், டூயல்-டோன் ப்ரீமியம் இன்டீரியர், டோர் மற்றும் டாஷ்போர்டில் இல்லுமினேட்டட் பேனல்கள் மற்றும் சீட்ஸுக்கு பலவிதமான அப்ஹோல்ஸ்டரி கஸ்டமைசேஷன் மற்றும் மற்ற இன்டீரியர் பேனல்களுக்கான விருபங்கள் போன்ற சிறந்த அம்சங்களைப் பெறுகிறது.
ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் 3.0 ப்ளாட்ஃபார்மிலிருந்து வருகிறது, அதன் 102kWh லித்தியம்-அயன் பேட்டரியை 195kW டிசி ஃபாஸ்ட் சார்ஜரைப் பயன்படுத்தி வெறும் 34 நிமிடங்களில் 10-80 சதவிகிதம் சார்ஜ் செய்ய முடியும். இந்த பேக் 575bhp மற்றும் 900Nm டோர்க்கை உற்பத்தி செய்கிறது. சொகுசு கார் என்று வரும்போது, அம்சங்கள் மற்றும் அதிவேகத்தைப் பற்றி எல்லாரும் பேசுகிறார்கள். இந்த சொகுசு எலக்ட்ரிக் கார் 0-100 கிமீ வேகத்தை வெறும் 4.5 வினாடிகளில் எட்டிவிடும். மேலும், ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார், ஒருமுறை பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் செய்தால் 530 கிலோமீட்டர் தூரம் வரை WLTP-க்ளைம் மைலேஜை வழங்குகிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்