- ஒரு ஒரு அண்டிற்க்கும் 24.22 சதவிகிதம் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது
- சமீபத்தில் 9 லட்சம் யூனிட் உற்பத்தி சாதனையை தாண்டியது
இந்த மாத தொடக்கத்தில், மஹிந்திரா செப்டம்பர் 2023 க்கான அதன் விற்பனை புள்ளிவிவரங்களை வெளியிட்டது. இப்போது, கார் மார்க்கெட்டில் அதன் போர்ட்ஃபோலியோ முழுவதும் மாடல்ஸின் தனிப்பட்ட விற்பனை எண்களை பட்டியலிட்டுள்ளது. செப்டம்பர் 2023 இல் 11,846 யூனிட்ஸ் விற்பனை செய்யப்பட்டு, பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டிலும் மஹிந்திராவின் வரிசையில் ஸ்கார்பியோ விற்பனை பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
ஒப்பிடுகையில், நிறுவனம் கடந்த ஆண்டு இதே காலத்தில் ஸ்கார்பியோவின் 9,536 யூனிட்ஸை விற்பனை செய்தது, எனவே இது ஒரு ஒரு அண்டிற்க்கும் வளர்ச்சி 24.22 சதவீதமாக இருந்தது. தற்போது, இந்த பிராண்ட் ஸ்கார்பியோ பெயர் பலகையின் கீழ் இரண்டு மாடல்ஸை விற்பனை செய்கிறது. இதில் ஸ்கார்பியோ என்மற்றும் ஸ்கார்பியோ க்ளாசிக் ஆகியவை அடங்கும்.
சமீபத்தில், மஹிந்திரா XUV700 இன் சேல்ஸ் விவரங்களை வெளியிட்டது, இதில் 6,350 யூனிட்ஸ் டீசல் மற்றும் 2,205 யூனிட்ஸ் பெட்ரோல் வேரியண்ட் என மொத்தம் 8,555 யூனிட்ஸை விற்பனை செய்துள்ளது.
மஹிந்திரா ஸ்கார்பியோ சமீபத்தில் நாட்டின் 9 லட்சம் யூனிட் உற்பத்தி சாதனையை கடந்தது. 2002 இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த எஸ்யுவி பிராண்டின் குடையின் கீழ் அதிகம் விற்பனையாகும் மாடல்ஸில் ஒன்றாகும். சமீபத்தில், ஸ்கார்பியோ என்ஆனது ரூ. 81,000 வரை ஒரு பெரிய விலை உயர்வை.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்