- மாருதி செலிரியோ, வேகன் ஆர், ஸ்விஃப்ட் மற்றும் எஸ்-பிரஸ்ஸோவை உடனடியாக டெலிவரியில் பெறலாம்
- எஸ்-பிரஸ்ஸோ மற்றும் ஈகோ மறுஅழைப்பை பெற்றது
பெரும்பாலான மாருதி கார்ஸ் தற்போது மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை வெயிட்டிங் பீரியடைக் கொண்டிருக்கும் போது, நான்கு கார்ஸ் உடனடி டெலிவரியுடன் கிடைக்கின்றது. இதில் செலிரியோ, வேகன் ஆர், ஸ்விஃப்ட் மற்றும் எஸ்-பிரஸ்ஸோ ஆகியவை அடங்கும்.
செலிரியோ, வேகன் ஆர், ஸ்விஃப்ட் மற்றும் எஸ்-பிரஸ்ஸோ ஆகியவற்றில் வெயிட்டிங் பீரியட் இல்லை
இந்த அனைத்து மாடல்ஸும் பிராண்டின் அரீனா அவுட்லெட்ஸ் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன மற்றும் சென்னை பிராந்தியத்தில் முன்பதிவு செய்த பிறகு உடனடியாக கிடைக்கும். செலிரியோ, வேகன் ஆர் மற்றும் எஸ்-பிரஸ்ஸோ ஆகியவை சிஎன்ஜி வேரியண்ட்டுடன் மேனுவல் மற்றும் ஏஎம்டீ கியர்பாக்ஸுடன் 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இதற்கிடையில், வேகன் ஆர் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடனும் பெறலாம்.
ஸ்விஃப்ட் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, இது 89bhp மற்றும் 113Nm டோர்க்கை உற்பத்தி செய்ய டியூன் செய்யப்பட்டுள்ளது மற்றும் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஏஎம்டீ யூனிட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது.
மாருதி சுஸுகி எஸ்-பிரஸ்ஸோ மறுஅழைப்பு
ஸ்டீயரிங் டை ரோட்டின் ஒரு பகுதியில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக மாருதி சுஸுகி ஈகோ மற்றும் எஸ்-பிரஸ்ஸோவின் 87,599 யூனிட்ஸை மறுஅழைப்பு செய்யபட்டுள்ளது. பாதிக்கப்பட்ட யூனிட்ஸ் 5 ஜூலை, 2021 முதல் 15 பிப்ரவரி, 2023 க்கு இடையில் தயாரிக்கப்பட்டது மற்றும் வாடிக்கையாளர்களிடம் கட்டணம் ஏதுமின்றி மாருதி வர்க்ஷாப் ஆய்வு செய்யப்பட்டு பழுதுபார்க்கப்படும்.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்