- X-ட்ரைல் சிங்கிள் இன்ஜின் வேரியன்ட்டில் வழங்கப்படுகிறது
- ஆகஸ்ட் 1 ஆம் தேதி விலை அறிவிப்பு
நிசான் இந்தியா தனது சமீபத்திய ஃபிளாக்ஷிப் எஸ்யுவியான X-ட்ரைல் மாடலுக்கான முன்பதிவுகளை அதிகாரப்பூர்வமாக ஏற்கத் தொடங்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த த்ரீ-ரோ எஸ்யுவியை ரூ. 1 லட்சம் செலுத்தி முன்பதிவு செய்யலாம். இந்த கார் சிங்கிள் வேரியன்ட் மற்றும் பேர்ல் ஒயிட், டைமன்ட் பிளாக் மற்றும் ஷாம்பெயின் சில்வர் ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் வழங்கப்படும். இதேபோல், நிசான் இந்தியா இந்த எஸ்யுவியின் விலையை ஆகஸ்ட் 1, 2024 அன்று அறிவிக்கும்.
நிசான் X-ட்ரைல் ஆனது 1.5-லிட்டர் த்ரீ-சிலின்டர் விசிடீ இன்ஜின் சிவிடீ கியர் பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 12V மைல்ட்-ஹைப்ரிட் அமைப்பின் உதவியுடன் 160bhp மற்றும் 300Nm பீக் டோர்க்கை உருவாக்குகிறது. மேலும், இந்த காரில் இகோ, ஸ்டாண்டர்ட் மற்றும் ஸ்போர்ட் ஆகிய மூன்று டிரைவ் மோட்ஸில் உள்ளன.
இன்டீரியரைப் பொறுத்தவரை, X-ட்ரைலின் கேபின் மிகவும் வசதியானது மற்றும் தோற்றம் மற்றும் அம்சங்களின் அடிப்படையில் அழகாக இருக்கிறது. ஏனெனில் இதில் சிறந்த இன்டீரியர் டிசைனை நிசான் நிறுவனம் வழங்கியுள்ளது. அம்சங்களைப் பொறுத்தவரை, X-ட்ரைல் மாடல் 8-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் வயர்ட் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே கனெக்ட், டூயல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், ஆட்டோ-டிம்மிங் ஐஆர்விஎம், ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் வயர்லெஸ் சார்ஜர் ஆகியவற்றுடன் வரும். மேலும் என்னவென்றால், இது லேதரால் மூடப்பட்ட ஸ்டீயரிங் வீல் மற்றும் ரியரில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனலுடன் வருகிறது. இதேபோல், இது 360 டிகிரி சரவுண்ட் கேமரா, பனோரமிக் சன் ரூஃப், ஃப்ரண்ட் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள், 7 ஏர்பேக்குகள் மற்றும் மேனுவலி சரிசெய்யக்கூடிய ஃப்ரண்ட் சீட்ஸ் போன்ற மற்ற அம்சங்களை வழங்குகிறது.
போட்டி மற்றும் விலை அடிப்படையில், இந்தியாவிற்கு வரும் நிசான் X-ட்ரைல் மாடல் முழுமையான கட்டமைக்கப்பட்ட யூனிட்டாக (CBU) ரூ. 28 லட்சம் முதல் ரூ. 32 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) விலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுகப்படுத்தப்பட்டதும், இந்த மாடல் டொயோட்டா ஃபார்ச்சூனர், ஜீப் மெரிடியன், எம்ஜி குளோஸ்டர், ஹூண்டாய் தூக்ஸன் மற்றும் மஹிந்திரா XUV700 மற்றும் டாடா சஃபாரி போன்றவற்றுடன் போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்