- நான்கு வேரியண்ட்ஸில் வழங்கபடும்
- ஆட்டோமேட்டிக் வெர்ஷனிலும் கிடைக்கும்
நிசான் இந்தியா சமீபத்தில் அதன் மேக்னைட் வரிசையில் உள்ள குரோ எடிஷனை அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்பெஷல் எடிஷனானது, ஆல் பிளாக் இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியரில் நான்கு வேரியண்ட்ஸில் வழங்கபடும். இப்போது, மேக்னைட் குரோ எடிஷனின் ஆன்-ரோடு விலையை நாங்கள் இதில் எழுதியுள்ளோம்..
இந்தியாவின் சிறந்த 10 நகரங்களில் புதிய நிசான் மேக்னைட் குரோ எடிஷனின் ஆன்-ரோடு விலைகளைப் பட்டியலிட்டுள்ளோம்:
நகரம் | 1.0-லிட்டர் என்ஏ பெட்ரோல் எம்டீ | 1.0-லிட்டர் என்ஏ பெட்ரோல் ஏஎம்டீ | 1.0- லிட்டர் டர்போ-பெட்ரோல் எம்டி | 1.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் சிவிடீ |
மும்பை | ரூ. 9.68 லட்சம் | ரூ. 10.14 லட்சம் | ரூ. 11.26 லட்சம் | ரூ. 12.40 லட்சம் |
சென்னை | ரூ. 9.59 லட்சம் | ரூ. 10.05 லட்சம் | ரூ. 11.16 லட்சம் | ரூ. 12.70 லட்சம் |
கோயம்புத்தூர் | ரூ. 9.58 லட்சம் | ரூ. 10.04 லட்சம் | ரூ. 11.15 லட்சம் | ரூ. 12.69 லட்சம் |
மதுரை | ரூ. 9.58 லட்சம் | ரூ. 10.04 லட்சம் | ரூ. 11.15 லட்சம் | ரூ. 12.69 லட்சம் |
பெங்களூரு | ரூ. 9.92 லட்சம் | ரூ. 10.39 லட்சம் | ரூ. 11.54 லட்சம் | ரூ. 12.91 லட்சம் |
திருப்பூர் | ரூ. 9.58 லட்சம் | ரூ. 10.04 லட்சம் | ரூ. 11.15 லட்சம் | ரூ. 12.69 லட்சம் |
ஹைதராபாத் | ரூ. 9.91 லட்சம் | ரூ. 10.38 லட்சம் | ரூ. 11.53 லட்சம் | ரூ. 12.90 லட்சம் |
கொச்சி | ரூ. 9.82 லட்சம் | ரூ. 10.28 லட்சம் | ரூ. 11.42 லட்சம் | ரூ. 12.68 லட்சம் |
திருச்சிராப்பள்ளி | ரூ. 9.58 லட்சம் | ரூ. 10.04 லட்சம் | ரூ. 11.15 லட்சம் | ரூ. 12.69 லட்சம் |
டெல்லி | ரூ. 9.37 லட்சம் | ரூ. 9.81 லட்சம் | ரூ. 10.89 லட்சம் | ரூ. 12.21 லட்சம் |
1.0 லிட்டர் என்ஏ பெட்ரோல் அல்லது 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் விருப்பத்தில் பெறலாம். முந்தையது 71bhp மற்றும் 96Nm டோர்க்கை உருவாக்குகிறது மற்றும் ஃபைவ்-ஸ்பீட் மேனுவலுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது சமீபத்தில் ஏஎம்டீ கியர்பாக்ஸுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. மறுபுறம், பிந்தையது, 99bhp மற்றும் 152Nm டோர்க்கை வெளிப்படுத்தும் மற்றும் மேனுவல் டிரான்ஸ்மிஷன் சிவிடீ யூனிட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்