நிசான் தனது பிரபலமான காம்பேக்ட் எஸ்யுவி மேக்னைட்டின் புதிய ஃபேஸ்லிஃப்ட் வேரியன்ட்டை அக்டோபர் 4, 2024 அன்று அறிமுகப்படுத்த உள்ளது. 2020 இல் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட மேக்னைட், இப்போது சந்தையில் போட்டித்தன்மையுடன் இருக்கும் வகையில் சில புதிய மாற்றங்களுடன் மீண்டும் வருகிறது. வாருங்கள் இந்த புதிய மாடலிலிருந்து நாம் என்ன எதிர்பார்க்கலாம் என்பதை இதில் பார்போம்.
எக்ஸ்டீரியர் மற்றும் இன்டீரியர்
புதிய மேக்னைட் ஃபேஸ்லிஃப்டில் ஸ்டைலிங்கில் சிறிய மாற்றங்கள் இருக்கும், ஆனால் அதன் ஒட்டுமொத்த டிசைன் முன்பு போலவே இருக்கும். இந்த மாடலில் புதிய கிரில், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஹெட்லேம்ப்ஸ், எல்-வடிவ எல்இடி டிஆர்எல்கள், புதிய பம்பர்ஸ் மற்றும் 16-இன்ச் அலோய் வீல்ஸ் உள்ளிட்ட சில காஸ்மெட்டிக் மாற்றங்கள் கிடைக்கும்.
இன்டீரியரைப் பற்றி பேசுகையில், இந்த ஃபைவ்-சீட்டர் கிராஸ்ஓவரின் கேபின் வடிவமைப்பு அப்படியே இருக்கும், ஆனால் டாஷ்போர்டில் சிங்கிள்-பேன் சன்ரூஃப் மற்றும் ஆறு ஏர்பேக்குகள் போன்ற சில சிறிய மாற்றங்கள் மற்றும் புதிய அம்சங்கள் சேர்க்கப்படும்.
இன்ஜின் மற்றும் பர்ஃபார்மன்ஸ்
2024 மேக்னைட் தற்போதைய மாடலில் உள்ள அதே இன்ஜின்களைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 1.0 லிட்டர் த்ரீ சிலிண்டர் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் இருக்கும். முதல் இன்ஜின் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் அல்லது ஃபைவ்-ஸ்பீட் ஏஎம்டீ கியர்பாக்ஸுடன் வரும், அதே நேரத்தில் டர்போ இன்ஜின் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் சிவிடீ விருப்பங்களில் கிடைக்கும்.
லான்ச் மற்றும் போட்டியாளர்கள்
நிசான் தனது புதிய மேக்னைட் ஃபேஸ்லிஃப்டை இந்திய சந்தையில் அக்டோபர் 4, 2024 அன்று அறிமுகப்படுத்தவுள்ளது. இது மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், ஹூண்டாய் வென்யூ, மஹிந்திரா 3XO மற்றும் வரவிருக்கும் ஸ்கோடா கைலாக் போன்ற காம்பேக்ட் எஸ்யுவிகளுடன் போட்டியிடும். இருப்பினும், இது ரெனோ கைகர், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் மற்றும் டாடா பஞ்ச் போன்ற என்ட்ரி-லெவல் காம்பேக்ட் எஸ்யூவிகளிடமிருந்து நேரடி போட்டியை எதிர்கொள்ளும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்