- 2025 இல் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
- புதிய வேரியன்ட்ஸுடன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
நிசான் இந்தியா தனது புதிய மாடல்களை அடுத்த ஆண்டுக்குள் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, இதில் மேக்னைட் அடங்கும். இந்த கிராஸ்ஓவர் பல புதுப்பிப்புகளைப் பெறும் மற்றும் அதன் ஏற்றுமதியும் தொடங்கப்படும்.
2025 நிசான் மேக்னைட் எக்ஸ்டீரியர்
சமீபத்திய ஸ்பை படங்களில் கார் முழுவதும் மூடப்பட்டிருந்தன, ஆனால் அதன் எக்ஸ்டீரியரில் சில காஸ்மெட்டிக் மாற்றங்களை நாங்கள் பார்த்தோம். அதைப் பார்த்தவுடன் அதில் மெட்டல் ஷீட்க்குப் பதிலாக பிளாஸ்டிக் பாகங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது போல் தெரிகிறது. இந்த புதுப்பிப்புகளில் புதிய கிரில், புதிய பம்ப்பர்கள், கவர்ச்சிகரமான ஹெட்லைட்ஸ் மற்றும் எல்இடி லைட்ஸ் ஆகியவை அடங்கும். அதன் டெயில் லேம்ப்ஸ் மற்றும் புதிய அலோய் வீல்களில் மாற்றங்களை எதிர்பார்க்கிறோம்.
புதிய நிசான் மேக்னைட்டின் இன்டீரியர்
தற்போதுள்ள மேக்னைட்டில் உள்ள அதே எலிமென்ட்ஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், நிசான் அதை ஒரு புதிய வேரியன்ட்டில் அறிமுகப்படுத்தலாம் மற்றும் அதன் போட்டியாளர்களுடன் போட்டியிட சில வித்தியாசமான அம்சங்களை வழங்கலாம். ஆனால் அதன் டாஷ்போர்டு மற்றும் சீட் அமைப்பு கிட்டத்தட்ட தற்போதைய மாடலைப் போலவே இருக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம்.
இன்ஜின் விருப்பங்கள் மற்றும் பர்ஃபார்மன்ஸ்
ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட நிசான் மேக்னைட்டின் இன்ஜினில் எந்த மாற்றமும் செய்யப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விற்பனையில் உள்ள மாடலில் 1.0-லிட்டர் என்ஏ பெட்ரோல் மற்றும் 1.0-லிட்டர் டர்போசார்ஜ்ட் பெட்ரோல் இன்ஜின் விருப்பங்கள் உள்ளன, அவை முறையே 71bhp/96Nm மற்றும் 99bhp/160Nm டோர்க்கை உருவாக்குகின்றன. இரண்டு இன்ஜின்களும் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல், ஏஎம்டீ மற்றும் சிவிடீ ஆப்ஷனுடன் இணைக்கப்பட்டுள்ளன.
ஸ்பைஷாட்ஸ் ஆதாரம்: ஆட்டோகார் இந்தியா
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்