- காம்பேக்ட் எஸ்யுவிக்கான முதல் பெரிய புதுப்பிப்பு
- இரண்டு இன்ஜின் மற்றும் மூன்று கியர்பாக்ஸ் ஆப்ஷன் உள்ளது
அதன் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாக, புதுப்பிக்கப்பட்ட நிசான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் 2024 இன் படங்கள் லீக் ஆனது. புதிய கிரில் மற்றும் ஹெட்லேம்ப்களுடன் முழுமையான புதிய ஃபேசியாவை இந்த படங்கள் வெளிப்படுத்துகின்றன. பஞ்ச் இவிக்கான பிஎன்கேப் கிராஷ் டெஸ்ட் படத்தில் நாம் பார்த்த கார் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் என்பதை உறுதிப்படுத்தும் ஃப்ரண்ட்டில் பெரிய குரோம் இன்சர்ட்ஸ் உள்ளன. டெயில் லேம்ப்களின் ஒட்டுமொத்த டிசைனும் மாறாமல் உள்ளது, ஆனால் இன்டீரியரில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு காருக்கு ஒரு புதிய தோற்றத்தை அளிக்கின்றன.
2024 மேக்னைட்டின் கேபின் நிசானால் வெளியிடப்பட்டது மற்றும் நிஜ உலக படங்கள் புதிய சீட் அப்ஹோல்ஸ்டரி, புதுப்பிக்கப்பட்ட ஸ்டீயரிங் மற்றும் டூயல்-டோன் கலர் போன்ற சில விஷ்யங்கள் இந்த புகைப்படத்தில் தெரிகின்றன. காரின் பெரிய யுஎஸ்பிகளில் ஒன்று ஏர் ஃபில்டர் சிஸ்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இது ரேஞ்சில் நிலையான பொருத்தமாக வழங்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். 360 டிகிரி கேமரா, கனெக்டெட் கார் டெக்னாலஜி, டிரைவர் சீட்க்கான உயரம் சரிசெய்தல், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ரியர் ஏசி வென்ட்ஸுடன் கூடிய க்ளைமேட் கன்ட்ரோல், பவர் மிரர்ஸ் மற்றும் விண்டோஸ் மற்றும் இறுதியாக வயர்லெஸ் ஃபோன் மிரரிங் ஆகியவை மற்ற முக்கிய அம்சங்களாகும்.
மேக்னைட் அதன் இரண்டு 1.0 லிட்டர் இன்ஜின்களுடன் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்று 1.0-லிட்டர் என்ஏ பெட்ரோல் ஆகும், இது 71bhp மற்றும் 96Nm டோர்க்கை உற்பத்தி செய்கிறது மற்றும் ஃபைவ்-ஸ்பீட் எம்டீ அல்லது ஃபைவ்-ஸ்பீட் ஏஎம்டீ உடன் பெறலாம். இரண்டாவது 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினில் 99bhp/160Nm டோர்க்கை உற்பத்தி செய்யும். இந்த இன்ஜின் சிக்ஸ்-ஸ்பீட் எம்டீ அல்லது சிவிடீ யூனிட்டுடன் உடன் கிடைக்கிறது.
இந்த கார் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு புதுப்பிப்பை பெறுகிறது. இது ஹூண்டாய் வென்யூ, மாருதி பிரெஸ்ஸா, மாருதி ஃப்ரோன்க்ஸ், டொயோட்டா டைசர் மற்றும் ரெனோ கைகர் ஆகிய காருகளுக்கு போட்டியாக இருக்கும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்