- இது ஆறு வேரியன்ட்ஸில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
- இரண்டு இன்ஜின் விருப்பங்களில் கிடைக்கும்
நிசான் அதன் பிரபலமான சப்-காம்பேக்ட் எஸ்யுவி மேக்னைட்டின் 2024 ஃபேஸ்லிஃப்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் அறிமுக விலைகள் (முதல் 10,000 வாங்குபவர்களுக்கு) ரூ. 5.99 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. இந்த ஃபேஸ்லிஃப்ட் ஆறு வேரியன்ட்ஸ் மற்றும் இரண்டு இன்ஜின் விருப்பங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இதில் புதிய ஸ்டைலிங் மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த மேக்னைட்டை இன்னும் கவர்ச்சிகரமானதாகவும் நவீனமாகவும் ஆக்குகிறது.
எக்ஸ்டீரியர்
2024 மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட்டின் வெளிப்புற வடிவமைப்பில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய ஃப்ரண்ட் லூக் மற்றும் குரோம் இன்சர்ட்ஸ் இதில் சேர்க்கப்பட்டுள்ளன, இது எஸ்யுவிக்கு அதிக பிரீமியம் லூக்கை அளிக்கிறது. புதிய அலோய் வீல்ஸின் வடிவமைப்புடன் எஸ்யுவியின் ஸ்டைலிங் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. ரியரில், டெயில் லைட்டின் டிசைன் அப்படியே தக்கவைக்கப்பட்டுள்ளது, ஆனால் அவற்றின் எலிமெண்ட்ஸ் மாற்றப்பட்டு, ரியர்க்கு புதிய தோற்றத்தை அளிக்கிறது.
இன்டீரியர்
மேக்னைட்டின் கேபினில் அதிகம் மாற்றம் செய்யப் படவில்லை, ஆனால் சில புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இது புதிய ஸ்டீயரிங் வீல் மற்றும் புதிய வண்ணத் திட்டங்கள் மற்றும் அப்ஹோல்ஸ்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் ஃபுல்லி லோடெட் வேரியன்ட்டில், 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் ஃபோன் மிரரிங், டிரைவர் சீட்க்கான உயரத்தை சரிசெய்தல், பவர்ட் மிர்ரர், HEPA ஏர் ஃபில்டர், எல்இடி ஹெட்லேம்ப்ஸ் மற்றும் எல்இடி டிஆர்எல்கள் போன்ற அம்சங்களைப் பெறுவீர்கள்.
இன்ஜின் விருப்பங்கள்
மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் இரண்டு இன்ஜின் விருப்பங்களுடன் வழங்கப்படுகிறது:
1.0 லிட்டர் என்ஏ பெட்ரோல் இன்ஜின்: இந்த இன்ஜின் 71bhp பவரையும், 96Nm டோர்க் திறனையும் உற்பத்தி செய்கிறது. இது ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் அல்லது ஃபைவ்-ஸ்பீட் ஏஎம்டீ கியர்பாக்ஸுடன் கிடைக்கும்.
1.0-லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின்: இந்த இன்ஜின் 99bhp பவரையும் மற்றும் 160Nm டோர்க்கை உற்பத்தி செய்கிறது, மேலும் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் அல்லது சிவிடீ கியர்பாக்ஸ் விருப்பங்களில் கிடைக்கிறது.
போட்டியாளர்
2024 நிசான் மேக்னைட் மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, கியா சோனெட் மற்றும் மஹிந்திரா XUV3XO போன்ற எஸ்யுவிகளுடன் போட்டியிடும்.