நிசான் நிறுவனம் இந்த மாதம் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அதன் ஒரே காரான மேக்னைட் மீது தள்ளுபடியை வழங்குகிறது. இந்த தள்ளுபடிகள் கேஷ் தள்ளுபடி, கார்ப்பரேட் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் மேண்டெனன்ஸ் பேக்கேஜ் போன்ற வடிவங்களில் வழங்கப்படுகின்றன. இந்த தள்ளுபடி 31 மே 2023 வரை செல்லுபடியாகும் என்பதை உங்களுக்குச் சொல்கிறோம்.
நிசான் மேக்னைட் வேரியண்ட்ஸ் மற்றும் இன்ஜின் ஸ்பெசிஃபிகேஷன் விவரங்கள்
நிசான் மேக்னைட் XE, XL, XV, டர்போ, ப்ரீமியம் மற்றும் ப்ரீமியம் டர்போ (O) வேரியண்ட்ஸில் கிடைக்கிறது, இதன் விலை ரூ.6 லட்சம் முதல் ரூ.10.86 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும். மேக்னைட் 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, இது 71bhp மற்றும் 96Nm டோர்க்கை உருவாக்குகிறது. இதில் ஃபைவ் ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது. ரெண்டாவது இன்ஜினில், 1.0-லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினைக் கொண்டுள்ளது, இது 99bhp மற்றும் 152Nm டோர்க்கையும் உருவாக்குகிறது. இதில் ஃபைவ் ஸ்பீட் மேனுவல் மற்றும் சிவிடீ யூனிட் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின்கள் புதிய BS6 ஃபேஸ் 2 மற்றும் ஆர்டிஇ விதிகளுடன் இணக்கமாக உள்ளன என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம்.
மே 2023க்கான மேக்னைட் எஸ்யுவிக்கான தள்ளுபடிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
வேரியண்ட்ஸ் | தள்ளுபடி வகை | தொகை |
XE வேரியண்ட் தவிர | மூன்று ஆண்டுகளுக்கு மேண்டெனன்ஸ் பேக்கேஜ் | ரூ. 12,100 வரை |
XE வேரியண்ட் தவிர | எக்ஸ்சேஞ்ச் போனஸ் | ரூ. 18,000 வரை |
XE மற்றும் XL வேரியண்ட் தவிர | ஆக்சஸரீஸ் அல்லது கேஷ் தள்ளுபடி | ரூ. 10,000 வரை |
நோன்- டர்போ XL ஏஎம்டீ | ஆக்சஸரீஸ் அல்லது கேஷ் தள்ளுபடி | ரூ. 20,000 வரை |
XE வேரியண்ட் தவிர | கார்ப்பரேட் தள்ளுபடி | ரூ. 7000 வரை |
குறிப்பிட்டுள்ள தள்ளுபடிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியண்ட்ஸில் கிடைக்கும் மற்றும் டீலர்ஷிப்ஸ், பகுதி, மண்டலம், மாறுபாடுகள் மற்றும் ஸ்டாக்ஸ் கிடைக்கும் தன்மையைப் பொறுத்தது. மேலும் விவரங்களுக்கு, உங்கள் அருகிலுள்ள நிசான் டீலர்ஷிப்ஸை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்