- வரும் வாரங்களில் விலை அறிவிக்கப்படும்
- புதிய குரோ எடிஷனிலும் கிடைக்கிறது
நிசான் இந்தியா சமீபத்தில் குறைந்த விலையில் மேக்னைட்டின் ஏஎம்டீ எடிஷனை வெளியிட்டது. என்ஏ மற்றும் டர்போ பெட்ரோல் இன்ஜின்ஸுடன் வழங்கப்படும் காம்பேக்ட் எஸ்யுவி, இதில் பிந்தையது சிவிடீ யூனிட்டுடன் மட்டுமே கிடைத்து வந்தது.
புதிய வேரியண்ட்ஸின் விலைகள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், அதன் மைலேஜை விவரங்களை ஆட்டோமேக்கர் வெளிப்படுத்தியுள்ளது. மேக்னைட் எஸ்யுவியின் கிடைக்கக்கூடிய அனைத்து வேரியண்ட்ஸின் மைலேஜ் விவரங்கள் இங்கே உள்ளது.
வேரியண்ட் | மைலேஜ் (ஏஆர்ஏஐ கோரப்பட்டது) |
1.0 லிட்டர் பெட்ரோல் மேனுவல் | 19.35 கி.மீ |
1.0 லிட்டர் பெட்ரோல் ஏஎம்டீ | லிட்டருக்கு 19.70 கி.மீ |
1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மேனுவல் | 20 கி.மீ |
1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் சிவிடீ | 17.4 கி.மீ |
1.0-லிட்டர் என்ஏ பெட்ரோல் 71bhp மற்றும் 96Nm டோர்க்கை வெளியிடுகிறது, அதேசமயம் டர்போ பெட்ரோல் 99bhp மற்றும் 160Nm டோர்க்கை உற்பத்தி செய்ய டியூன் செய்யப்பட்டுள்ளது.
மேக்னைட் குரோ எடிஷன்
புதிய ஏஎம்டீ கியர்பாக்ஸுடன், மேக்னைட் புதிய குரோ எடிஷனிலிம் இருக்கலாம். மேக்னைட் குரோ பிளாக் நிற எக்ஸ்டீரியரை பெறுகிறது, அதாவது டார்க் ஃப்ரண்ட் கிரில், க்ளோஸ் பிளாக் அலோய் வீல்ஸ், ரெட் நிற ப்ரேக் காலிப்பர்ஸ், பிளாக் ஓஆர்விஎம்'ஸ் மற்றும் ரூஃப் ரெயில்ஸ் மற்றும் ஃபுல் பிளாக் இன்டீரியர் தீம்ஸில் வழங்கப்படும்.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்