- நிசான் இந்த ஆண்டு மே மாதத்தில் ஒரு ஒரு ஆண்டிற்கு 23 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்தது
- எக்ஸ்போர்ட் 2,013 யூனிட்ஸாக இருந்தது
நிசான் இந்தியா மே 2023 இன் விற்பனை
நிசான் மோட்டார் இந்தியா (என்எம்ஐபீஎல்) 2023 மே மாதத்தில் மொத்தம் 4,631 யூனிட்ஸை விற்பனை செய்ததாக அறிவித்தது, இதில் டொமெஸ்டிக் 2,618 யூனிட்ஸ் மற்றும் எக்ஸ்போர்ட்டில் 2,013 யூனிட்ஸ் அடங்கும். நிறுவனத்தின்படி, ஒரு ஒரு ஆண்டிற்கு டொமெஸ்டிக் விற்பனை 23 சதவீதம் வரை அதிகரித்துள்ளது மே 2023 இல்.
நிசான் இந்தியாவின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் மேற்கோள்
நிசான் மோட்டார் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் ராகேஷ் ஸ்ரீவஸ்தவா பேசுகையில், “நிசான் மேக்னைட்டுக்கான வலுவான தேவையின் வலிமையால் 23 சதவீத வளர்ச்சியுடன் நேர்மறையான வேகம் தொடர்கிறது. நிசான் மேக்னைட் ஸ்பெஷல் எடிஷன் கெஸாவின் அறிமுகம், மிகவும் போட்டித்தன்மை ஆன விலை நிலைப்படுத்தலில் கவர்ச்சிகரமான மதிப்பு முன்மொழிவுகளுடன், மேக்னைட் என்ற பிராண்டை வலுப்படுத்தியுள்ளது.”
நிசான் மேக்னைட் கெஸா எடிஷன் மே 2023 இல் லான்ச் செய்யப்பட்டது
கடந்த மாதம், நிசான் மேக்னைட் கெஸா எடிஷனை அறிமுகப்படுத்தியது, இந்தியாவில் இதன் விலை ரூ.7.39 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). நிலையான வழங்குதலுடன் ஒப்பிடும்போது, புதிய வெர்ஷனில் ஒன்பது இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, ஜேபிஎல் ஸ்பீக்கர்ஸ், ஆப்-அடிப்படையிலான கண்ட்ரோல்ஸ் கூடிய ஆம்பியன்ட் லைட்டிங், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, ஷார்க்-ஃபின் ஆன்டெனா மற்றும் பெய்ஜ் நிறமுடைய சீட் அப்ஹோல்ஸ்டரி விருப்பத்தேர்வுகள் உடன் உள்ளது.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்