- இந்தியாவில் 2025 இல் லான்ச் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
- இது புதிய பிளாட்ஃபார்ம் அடிப்படையாகக் கொண்டது
புதிய ரெனோ டஸ்டர் நவம்பர் 29, 2023 அன்று சர்வதேச அளவில் அறிமுகம் செய்யபடும். இந்த பிரபலமான எஸ்யுவியின் மூன்றாம் ஜெனரேஷன் மாடலாக இது இருக்கும், மேலும் இந்த வாகனம் ரெனோ இந்தியாவின் டி-எஸ்யுவி திட்டங்களுக்கும் வழிவகுக்கும்.
இந்த எஸ்யுவியின் ஸ்பை படங்கள் முற்றிலும் புதிய இன்டீரியர், அம்சங்கள் மற்றும் புதிய இன்ஜின் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருப்பதைக் காட்டுகிறது. சமீபத்தில் பிரேசிலில் ரெனோ காட்சிப்படுத்திய புதிய மாடுலர் பிளாட்ஃபார்ம் அடிப்படையில் டஸ்டர் உருவாக்கப்படும். இது தவிர, மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் ஜிடிஐ டர்போ பெட்ரோல் இன்ஜின் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரெனோ க்விட், ட்ரைபர் மற்றும் கைகர் ஆகியவை தற்போது இந்திய மார்க்கெட்டில் விற்பனையில் உள்ளன மற்றும் முதல் ஜெனரேஷன் டஸ்டர் 2021 இல் நிறுத்தப்பட்டது. ரெனோ நிறுவனம் இந்த ஆண்டு தனது சென்னை ஆலையில் இரண்டு புதிய டி-எஸ்யுவிகள் மற்றும் ஒரு பட்ஜெட் எலக்ட்ரிக் காரை உற்பத்தி செய்வதாக அறிவித்துள்ளது. இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படும் எஸ்யுவிகள் இரண்டு வரிசை மற்றும் மூன்று வரிசை கட்டமைப்புகளில் டஸ்டராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் ஏ-செக்மெண்ட் வாகனங்கள் எலக்ட்ரிக் க்விட் அல்லது எலக்ட்ரிக் கைகராக இருக்கலாம்.
இது அறிமுகப்படுத்தப்பட்டதும், இது ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், வோக்ஸ்வாகன் டைகுன், ஸ்கோடா குஷாக், மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் போன்ற கார்ஸுடன் போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்