- ஃபோர்த் ஜெனரேஷன் ஸ்விஃப்ட் ஆகும்
- 2024 இல் இந்தியாவிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
நெக்ஸ்ட் ஜெனரேஷன் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் 2023 ஜப்பானிய மொபிலிட்டி ஷோவில் காட்சிப்படுப்தப்பட்டது. இது ஒரு ஸ்போர்ட்டி வடிவமைப்பைக் கொண்டுள்ளது, இதன் கேபினுக்கு உள்ளேயும் வெளியேயும் பல புதிய தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.
புதிய எக்ஸ்டீரியர் டிசைன்
மாருதி ஸ்விஃப்ட்டின் கடந்த மூன்று ஜெனரேஷன்ஸ் ஆக இருந்ததைப் போலவே, இந்த ஜெனரேஷனில் புதிய ஸ்போர்ட்டி வடிவமைப்பைக் கொண்டுள்ளது. ஃப்ரண்ட்டில் கிரில்லுக்கான புதிய வடிவமைப்புடன் ஒரு குரோம் கிரில்லைப் பெறுகிறது, பழைய மாடலில் ஹோரிசொன்டள் ஸ்லாட்ஸுடன் இருந்தன, இப்போது இது மெஷ் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. சைடில் இரண்டு பெரிய மாற்றங்கள் கொண்ட டோர் ஹேண்டல்ஸ் மற்றும் புதிய 16 இன்ச் வீலுடன் முற்றிலும் புதிய வடிவமைப்பை கொண்டிருந்தன. டெயில் லேம்ப்ஸின் வடிவங்களும் போன மாடலில் இருந்து தக்கவைக்கப்பட்டுள்ளன, ஆனால் இப்போது அவை பிளாக் நிறத்தில், புதிய லேஅவுட் கொண்டுள்ளன மற்றும் ஃபுல்லி எல்இடி யூனிட்ஸாக மாற்றியம்மைகப் பட்டுள்ளன.
புதிய கேபின்
கேபினில் ஒரு பெரிய மாற்றத்தை நாங்கள் எதிர்பார்த்தோம், ஆனால் சுஸுகி தற்போதைய மாடலை தக்கவைத்து உள்ளது. இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஸ்டீயரிங் வீல், பட்டன்ஸ் மற்றும் டச் சர்ஃபேஸ் மற்றும் சென்டர் கன்சோல் அனைத்தும் தக்கவைக்கப்பட்டுள்ளன, ஆனால் புதிய டாஷ்போர்டு, ஏசி கன்சோல் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்கு 10 இன்ச் டிஸ்ப்ளே உள்ளது.
வடிவமைப்பு மாறாத நிலையில், சுஸுகி இந்த ஜப்பானிய-ஸ்பெக் காருடன் புதிய ஓஎஸ் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், லெவல் 2 ஏடாஸ் ஃபுல்லி எல்இடி ஹெட்லேம்ப்ஸ் மற்றும் பல பாதுகாப்பு அம்சங்கள் உடன் பட்டியலை மேம்படுத்தியுள்ளது.
இன்ஜின் விவரங்கள்
மொபிலிட்டி ஷோவில் காட்டப்படும் கார் ஒரு ஹைப்ரிட் மாடல் ஆனால் இந்திய மார்க்கெட்க்கு 89bhp/113Nm உற்பத்தி செய்யும் அதே 1.2-லிட்டர் கே-சீரிஸ் பெட்ரோல் இன்ஜினுடன் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் அல்லது ஃபைவ்-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் உடன் இணைக்கப்படும். இந்த இன்ஜின் மைல்ட்-ஹைப்ரிட் டெக்னாலஜி மற்றும் சிஎன்ஜி இணக்கத்தன்மையைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயோகேஸ் டெக்னாலஜியில் மாருதியின் முதலீடு காரணமாக, எதிர்காலத்தில் இது சிஎன்ஜி வெர்ஷனிலும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.
லான்ச், போட்டியாளர்கள் மற்றும் விலை
புதிய ஃபோர்த் ஜெனரேஷன் ஸ்விஃப்ட் 2024 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு வர வாய்ப்புள்ளது, மேலும் இது இந்தியாவிற்கு மட்டுமின்றி தற்போதைய வாகனத்தைப் போலவே எல்எச்டி மற்றும் ஆர்எச்டி சந்தைகளுக்கும் ஏற்றுமதி செய்வதற்காக முழுமையாக தயாரிக்கப்படும். ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ், ரெனோ ட்ரைபர், சிட்ரோன் C3 , டாடா பஞ்ச் மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் போன்ற மாடல்ஸுடன் இது போட்டியிடும். தற்போதைய காரை விட ரூ.10,000 முதல் ரூ.30,000 வரை விலை உயரும் என எதிர்பார்க்கிறோம்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்