- 2026 இல் இந்தியாவிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
- பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கும்
ஜீப் தனது அடுத்த தலைமுறை காம்பஸ் எஸ்யுவியின் முதல் அதிகாரப்பூர்வ டீசரை வெளியிட்டுள்ளது. இந்த காரின் உற்பத்தி முதலில் 2025 இல் இத்தாலியில் உள்ள மெல்ஃபி ஆலையில் தொடங்கும் என்றும் பின்னர் 2026 இல் மற்ற இடங்களுக்கு மாற்றப்படும் என்றும் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
டீசரில் நெக்ஸ்ட்-ஜெனரேஷன் காம்பஸின் ப்ரோஃபைலைக் காட்டுகிறது, இது தற்போதைய மாடலை விட நீளமாகத் தெரிகிறது. ஸ்கொயர்-ஆஃப் வீல் ஆர்ச், ஃபிலோட்டிங்க் ரூஃப்ரெயில் மற்றும் ஹெட்லேம்ப்ஸின் வ்ரப் அரௌண்ட் டிசைன் ஆகியவற்றைப் படங்கள் காட்டுகின்றன. காம்பஸ் நீளமாக இருந்தால், அடுத்த தலைமுறை மெரிடியன் தற்போதைய மாடலை விட நீளமாக இருக்கும்.
காம்பஸின் RHD (வலது கை இயக்கி) உற்பத்தி மையமாக இந்தியா உள்ளது, எனவே இந்த கார் 2026 இல் உலகளவில் அறிமுகப்படுத்தப்படும் போது, இது இந்தியாவில் முதலில் அறிமுகப்படுத்தப்படும். இந்த எஸ்யுவி பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் விருப்பங்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் சேர்க்கப்படும்.
புதிய ஜீப் காம்பஸ், ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் டாடா ஹேரியர் போன்ற கார்களுடன் போட்டியிடும். இது தவிர, இது ஹூண்டாய் அல்கஸார், எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் மற்றும் டாடா சஃபாரி ஆகியவற்றின் மிட்-லெவல் வேரியன்ட்ஸுடன் போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்