- இது கோடியாக்கின் இரண்டாம் ஜெனரேஷன் காராக இருக்கும்
- இந்த நிதியாண்டின் இறுதிக்குள் லான்ச் செய்யப்படலாம்
ஸ்கோடா கோடியாக்கின் புதிய அவதார் விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம். சமீபத்தில், நியூ ஜெனரேஷன் ஸ்கோடா கோடியாக் இந்தியாவில் மீண்டும் சோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை வெளிவந்துள்ள புகைபடங்களைப் பார்த்த பிறகு, வரும் நாட்களில் ஸ்கோடா இந்த புதிய மாடலை என்னென்ன அம்சங்களை மாற்றியமைக்கும் என்பதை எளிதாக யூகிக்க முடியும்.
சோதனைக்கு பயன்படுத்தப்பட்ட இந்த காரின் புகைபடங்களில், மாடல் வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது மற்றும் வீல்ஸ்க்கு ஸ்பெஷல் ஏரோடைனமிக் ஸ்பேட்ஸ் கொடுக்கப்பட்டுள்ளன.
இது தவிர, காரின் லார்ஜ் ஃபேஸ், ஃபார்வார்ட் ஸ்லோப்பிங்க் ரூஃப் லைன் மற்றும் கனெக்டெட் டெயில் லைட்ஸ் உள்ளிட்ட அதன் வடிவமைப்பிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதும் தெளிவாகத் தெரிகிறது.
அதன் கேபினைப் பற்றி பேசுகையில், இந்த புதிய கோடியாக்கின் கேபின் அதன் சூப்பர்ப் மாடலைப் போலவே உள்ளது. முந்தைய தலைமுறை மாடலுடன் ஒப்பிடும்போது, இது டூயல் டிஜிட்டல் ஸ்கிரீன்களைக் கொண்டுள்ளது.
மேலும், இந்த முறை கேபினில் உள்ள பட்டன்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், காரில் இடமும் அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது, இது காருக்குள் அதிக இடத்தை வழங்கும்.
இந்தியாவில் தற்போது கோடியாக் பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே வழங்கப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஃபோக்ஸ்வேகனின் 2.0 லிட்டர் டீஎஸ்ஐ பெட்ரோல் இன்ஜினைக் கொண்டிருக்கும்.
இந்த இன்ஜின் ஆன்-டிமாண்ட் ஏடபிள்யூடி உடன் எய்ட்-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்படும். இந்த காரின் போட்டியாளர்களைப் பற்றி நாம் பேசினால், இது எம்ஜி குளோஸ்டர், டொயோட்டா ஃபார்ச்சூனர், இசுஸு MU-X மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஆகியவற்றுடன் போட்டியிடலாம்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்