- நெக்ஸ்ட்-ஜென் டிசையர் இன்னும் சில வாரங்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
- ஃபோர்த் ஜெனரேஷன் ஸ்விஃப்ட் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகமானது
புதிய டிசையர் விலைகள் அறிவிக்கப்பட இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், மாருதி சுஸுகி மீண்டும் காரை சோதனை செய்து வருகிறது. புதிய ஸ்பை ஷாட்ஸ் இணையத்தில் வலம் வரும் நிலையில், இம்முறை வரவிருக்கும் சப்-ஃபோர் மீட்டர் செடான் பற்றிய புதிய விவரங்கள் வெளியாகியுள்ளன.
புதிய ஸ்பை ஷாட்ஸின்படி, புதிய டிசையர் இன்டெக்ரேட்டட் ஹெட் லேம்ப்ஸ், ஹோரிசொன்டள் எல்இடி டிஆர்எல்ஸ், புதிய அலோய் வீல்ஸ், ப்ளைன்ட்-ஸ்பாட் மானிட்டர் மற்றும் புதிய ஃப்ரண்ட் மற்றும் ரியர் பம்ப்பர் கொண்ட எக்ஸ்டீரியர் சிறப்பம்சங்களுடன் வரும். இது புதிய எல்இடி டெயில்லைட்ஸ், மாற்றியமைக்கப்பட்ட டெயில்கேட் மற்றும் மாருதி வழங்கக்கூடிய செக்மெண்ட் ஃபர்ஸ்ட் எலக்ட்ரிக் சன்ரூஃப் ஆகியவற்றைப் பெறுகிறது.
இன்டீரியரைப் பொறுத்தவரை, 2024 மாருதி டிசையர் தற்போதைய ஜெனரேஷன் ஸ்விஃப்ட்டில் காணப்படும் பெரும்பாலான டிசைன் எலிமெண்ட்ஸ் மற்றும் அம்சங்களைக் கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கிறோம். இதில் ஆட்டோமேடிக் க்ளைமேட் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல், புதிய 9-இன்ச் ஸ்மார்ட்ப்ளே ப்ரோ+ டச்ஸ்கிரீன் யூனிட், ரியர் ஏசி வெண்ட்ஸ், வயர்லெஸ் சார்ஜர், ஓடீஏ அப்டேட்ஸ் மற்றும் வயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி போன்ற அம்சங்கள் இருக்கும்.
இன்ஜின் விருப்பங்களைப் பார்க்கும்போது, புதிய டிசையரில் 1.2-லிட்டர், த்ரீ-சிலிண்டர், Z12E பெட்ரோல் இன்ஜின் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டெட் மேனுவல் டிரான்ஸ்மிஷன்களுடன் (AMT) இணைக்கப்படும். மேலும் இந்த இன்ஜின் 80bhp பவரையும், 112Nm டோர்க்கையும் உற்பத்தி செய்கிறது. விரைவில் இதன் சிஎன்ஜி வெர்ஷனும் அறிமுகம் செய்யப்படும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்