- 2024 இறுதிக்குள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
- இது 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் வழங்கப்படும்
ஹோண்டா அமேஸ் இந்த ஆண்டின் இறுதியில் ஒரு பெரிய மாற்றத்துடன் வரும். அதன் டெஸ்டிங் கார் புதிய அவதாரத்தில் முதன்முறையாக தென்ப்பட்டது. இது ஒரு காம்பேக்ட் செடான் என்ற அடையாளத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் என்பதை படங்கள் வெளிப்படுத்துகின்றன, ஆனால் சிட்டியைப் போலவே இதுவும் பல எவல்யூஷனைப் பெறும்.
டிசைன்
டெயில் லேம்ப்ஸில் புதிய டிசைன் காணப்படுகின்றன, ஆனால் தற்போதைய மாடலின் சில டிசைன் எலிமெண்ட்ஸ் அப்படியே இருக்கும்.
இன்டீரியர் மாற்றங்கள்
காரின் உள்ளே மிகப்பெரிய மேஜர் அப்டேட் காணப்படும். இந்த நேரத்தில் ஹோண்டா 360 டிகிரி கேமரா, லெவல்-2 ஏடாஸ், டூயல்-டிஜிட்டல் ஸ்கிரீன், பவர் டிரைவர் சீட், வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸ் மற்றும் சன்ரூஃப் போன்ற அம்சங்களை இதில் சேர்க்கலாம்.
இன்ஜின் மற்றும் சிஎன்ஜி விவரங்கள்
இது ஹோண்டாவின் 1.2-லிட்டர் இன்ஜினுடன் வழங்கப்படும், இது 89bhp மற்றும் 110Nm டோர்க்கையும் உருவாக்கும். இது ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது சிவிடீ யூனிட் உடன் இணைக்கப்படும். அம்சங்களுடன், ஹோண்டா சிஎன்ஜி வெர்ஷனில் பவர் டெலிவரியிலும் கவனம் செலுத்த வேண்டும். தற்போது, சிஎன்ஜி பொருத்துதல் டீலர் மட்டத்தில் செய்யப்படுகிறது, ஆனால் ஹோண்டா மாருதி மற்றும் ஹூண்டாய் ஆகியவற்றுடன் கடுமையான போட்டியில் இருக்க விரும்பினால், அது ஃபேக்டரி ஃபிட்டெட் யூனிடாக இருக்க வேண்டும்.
மார்க்கெட்க்கு சவால்
இப்போது அமேஸ் செக்மென்ட்டில் மாருதி டிசையர் மற்றும் ஹூண்டாய் ஆரா மட்டுமே மிஞ்சியுள்ளதால், ஹோண்டாவுக்கு போட்டி கடுமையாக இருக்கும். இது தவிர, பாப்புலர் ஹேட்ச்பேக் கார்களான மாருதி பலேனோ, டொயோட்டா க்ளான்ஸா மற்றும் ஹூண்டாய் i20 ஆகியவற்றுடன் போட்டியிட வேண்டும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்