- ஆகஸ்ட் 2 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்
- சிக்ஸ்-ஸ்பீட் எம்டீ/ஏடீ உடன் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினைப் பெறுகின்றன
தற்போது இந்திய சந்தையில் சிட்ரோன் கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சமீபத்தில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி, சிட்ரோன் நிறுவனத்தின் ஃபிரண்ட் அம்பாஸிடராக நியமிக்கப்பட்டார். சமீபத்திய, சிட்ரோன் நிறுவனமான பசால்ட்டின் ஒரு புதிய டீசரை வெளியிட்டுள்ளது, இதில் இந்த புதிய மாடல் C3 ஏர்கிராஸ் ஐ விட அதிக அம்சங்கள் மற்றும் ஒரு பெரிய இன்டீரியர் மேம்படுத்தல் ஆகியவற்றுடன் வரும் என்று தெரியவந்துள்ளது. மேலும், சிட்ரோன் நிறுவனம் புதிய டீசர் மூலம் பசால்ட் காரின் வடிவத்தை அதிகாரப்பூர்வமாக காட்டியுள்ளது. இன்டீரியர் அப் கிரேடுகளின் ஒரு பகுதியாக, ஃப்ரண்ட் மற்றும் ரியர் சீட்ஸில் பயணிகளின் ஹெட் ரெஸ்ட்ஸுடன் சைட் சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ரியர் ஆர்ம் ரெஸ்ட் ஃபோன் ஹோல்டர் ஸ்லாட்டையும் பெறுகிறது.
மேலே குறிப்பிட்டுள்ளபடி, சிட்ரோன் நிறுவனம் டீசரில் முதல் முறையாக பசால்ட் டிசைனை அதிகாரப்பூர்வமாக காட்சிப்படுத்தியுள்ளது. புகைப்படங்களில், மேம்படுத்தல்களின் ஒரு பகுதியாக, எல்இடி டிஆர்எல்’ஸ் மற்றும் ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸைக் காணலாம், சில நாட்களில் C3 இல் இதைப் பார்க்கலாம்.
அதன் சி-க்யூப் ப்ரோக்ராமின் ஒரு பகுதியாக, சிட்ரோன் நிறுவனம் இந்தியாவிற்கான நான்காவது மாடலான பசால்ட்டை தயாரிக்கும். பிரெஞ்சு வாகன உற்பத்தியாளர் 115bhp/215Nm டோர்க்கை உற்பத்தி செய்யும் 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் வழங்கும். இந்த இன்ஜின் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் அல்லது சிக்ஸ்-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்படலாம்.
பசால்ட் டாடா கர்வ் ஐசிஇ வெர்ஷன்க்கு ஒரு மிகப்பெரிய போட்டியாளராக இருக்கு, இது ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், ஹோண்டா எலிவேட், எம்ஜி ஆஸ்டர், மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா ஹைரைடர் போன்றவற்றுடன் போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்