- இதில் கனெக்டிங் லைட் பார் உள்ளது
- இதன் விலை இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும்
டாடா மோட்டார்ஸ் அதன் ஹேரியர் மற்றும் ஃபிளாக்ஷிப் எஸ்யுவி சஃபாரியின் ஃபேஸ்லிஃப்டை டீஸ் செய்துள்ளது. இந்த இரண்டு கார்ஸின் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு கடந்த வாரமே தொடங்கியது. ஆனால் பிராண்டிற்கு கிடைத்த தகவலின்படி, அதன் அதிகாரப்பூர்வ முன்பதிவுகள் இம்மாதம் 6 ஆம் தேதி ஏற்றுக்கொள்ளப்படும். இந்த புதிய அப்டேட்டில், ஹேரியர் மற்றும் சஃபாரியின் எக்ஸ்டீரியர் மற்றும் இன்டீரியர் இரண்டும் புதுப்பிக்கப்பட்டு புதிய தோற்றத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
ஹேரியர் ஃபேஸ்லிஃப்ட்டின் புதிய அப்டேட்ஸ்
படங்களைப் பார்த்தால், இந்த எஸ்யுவியின் வடிவம் மிகவும் வலுவாக இருக்கும் போல் தெரிகிறது. இதனுடன், லைட் பார் வடிவமைப்பை இணைக்கும் எல்இடி டிஆர்எல்ஸுடன் வழங்கப்பட்டுள்ளது. ஒரு ஸ்ப்ளிட் எல்இடி ஹெட்லேம்ப் அமைப்பு மற்றும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர் கொண்ட கிரில்லைக் காட்டுகிறது.
அம்சங்களைப் பற்றி பேசுகையில், ஹேரியர் ஃபேஸ்லிஃப்ட்டில் சுமார் 12.3-இன்ச் பெரிய டச் ஸ்கிரீன் கொடுக்கப்படலாம். சென்டர் கன்சோலும் மறுவடிவமைப்பு செய்யப்படும். இது டாடாவின் இல்லுமினேட்டட் லோகோ, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், டச்-அடிப்படையிலான எச்விஏசி கண்ட்ரோல்ஸ் மற்றும் டூ-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் ஆகியவற்றைப் பெறுகிறது. இதனுடன், வயர்லெஸ் சார்ஜர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல், 360 டிகிரி சரவுண்ட் கேமரா, புதிய கியர் லெவர், ஏர் ப்யூரிஃபையர், ஆம்பியன்ட் லைட்டிங், பனோரமிக் சன்ரூஃப், ப்ளைன்ட் ஸ்பாட் மானிட்டர் சிஸ்டம் மற்றும் ஏடாஸ் போன்ற அம்சங்கள் கிடைக்கும்.
இன்ஜினைப் பற்றி பேசுகையில், ஹேரியர் ஃபேஸ்லிஃப்ட்டில் இருக்கும் விருப்பங்களுடன் புதிய 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் சேர்க்கப்படலாம்.
டாடா சஃபாரியின் புதிய அப்டேட்ஸ்
இந்த மூன்று வரிசை எஸ்யுவி பிளாக் நிற அக்ஸ்ன்ட்ஸுடன் புதிய காப்பர் நிறத்தில் வழங்கப்படும். படங்களின்படி, சஃபாரி காப்பர் நிறம் கொண்ட செங்குத்து ஸ்லேட்ஸுடன் புதிய மூடிய வடிவ கிரில்லைக் கொண்டிருக்கும். இதன் முன்பக்க பம்பர் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது, இது ஸ்ப்ளிட் எல்இடி ஹெட்லேம்ப் அமைப்பைக் கொண்டிருக்கும்.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்