- 11 வேரியண்ட்ஸ் மற்றும் ஆறு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது
- இந்தியாவில் ஆரம்ப விலை ரூ. 8.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் இந்தியாவில் புதிய நெக்ஸான் எஸ்யுவியின் விலையை அறிவித்தது. ஃபேஸ்லிஃப்டட் காம்பேக்ட் எஸ்யுவி 11 வேரியண்ட்ஸில் ரூ. 8.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் கிடைக்கிறது. மேலும், இந்த சமீபத்திய புதுப்பித்தலுடன், நெக்ஸான் இப்போது புதிய வடிவமைப்பு கூறுகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களின் பட்டியலைப் பெருமைப்படுத்துகிறது. இந்தக் கட்டுரையில், செப்டம்பர் 17, 2023 நிலவரப்படி, இந்தியாவின் சிறந்த 10 நகரங்களில் புதிய நெக்ஸான் எஸ்யுவியின் ஆன்-ரோடு விலைகளைப் பட்டியலிட்டுள்ளோம்.
நகரங்கள் | ஸ்மார்ட் பெட்ரோல் எம்டீ (பேஸ் வேரியண்ட்) | ஃபியர்லெஸ்+ S டீசல் ஏஎம்டீ (டாப்-ஸ்பெக் வேரியண்ட்) |
மும்பை | ரூ. 9.55 லட்சம் | ரூ. 18.72 லட்சம் |
சென்னை | ரூ. 9.46 லட்சம் | ரூ. 18.85 லட்சம் |
கோயம்புத்தூர் | ரூ. 9.45 லட்சம் | ரூ. 18.83 லட்சம் |
மதுரை | ரூ. 9.45 லட்சம் | ரூ. 18.83 லட்சம் |
பெங்களூரு | ரூ. 9.78 லட்சம் | ரூ. 19.15 லட்சம் |
திருப்பூர் | ரூ. 9.45 லட்சம் | ரூ. 18.83 லட்சம் |
ஹைதராபாத் | ரூ. 9.77 லட்சம் | ரூ. 19.14 லட்சம் |
கொச்சி | ரூ. 9.68 லட்சம் | ரூ. 19.12 லட்சம் |
திருச்சிராப்பள்ளி | ரூ. 9.45 லட்சம் | ரூ. 18.83 லட்சம் |
டெல்லி | ரூ. 9.25 லட்சம் | ரூ. 18.48 லட்சம் |
புதிய நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் இரண்டு இன்ஜின் விருப்பங்களுடன் வருகிறது - 1.2-லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5-லிட்டர் டீசல் இன்ஜின். முந்தையது 118bhp மற்றும் 170Nm டோர்க்கை உற்பத்தி செய்ய டியூன் செய்யப்பட்டுள்ளது, அதே நேரத்தில் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல், சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல், ஏஎம்டீ மற்றும் செவன்-ஸ்பீட் டிசிடீ கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. மறுபுறம், ஆயில் பர்னர் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஏஎம்டீ யூனிட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது, மொத்த ஆற்றல் வெளியீடு 113bhp மற்றும் 260Nm பீக் டோர்க் ஆகும்.
அதன் அம்சங்களைப் பொறுத்தவரை, பேஸ்-ஸ்பெக் ஸ்மார்ட் வேரியண்ட்டில் ஆறு ஏர்பேக்ஸ், டிஆர்எல்ஸுடன் எல்இடி ஹெட்லேம்ப்ஸ், எல்இடி டெயில்லைட்ஸ், மல்டி டிரைவ் மோட்ஸ், இல்லுமினேட்டட் லோகோவுடன் கூடிய டூ-ஸ்போக் ஸ்டீயரிங் வீல், ஐஎஸ்ஓஃபிக்ஸ் மவுண்ட்ஸ், ஃப்ரண்ட் பவர் விண்டோஸ், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்ஸ், சென்ட்ரல் லாக், ஹில் ஹோல்ட் கண்ட்ரோல் மற்றும் டில்ட் ஸ்டீயரிங்.
இதற்கிடையில், டாப்-ஸ்பெக் ஃபியர்லெஸ்+ எஸ் ட்ரிம், வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸ், ஹைட் அட்ஜஸ்ட்டெபல் டிரைவர்/கோ-டிரைவர் சீட்ஸ், சப்-வூஃபர், ஜேபிஎல் மியூசிக் சிஸ்டம், ஸ்லிம் பெசல்ஸுடன் கூடிய 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஐஆர்ஏ கனெக்ட் போன்ற அம்சங்களுடன் வருகிறது. இதில் வயர்லெஸ் சார்ஜர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், 360 டிகிரி சரவுண்ட் கேமரா, ப்ளைன்ட் ஸ்பாட் மானிட்டர், எலக்ட்ரிக் சன்ரூஃப், ஆல்-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் ஏர் ப்யூரிஃபையர் போன்ற அம்சங்களும் வழங்கப்படுகின்றன.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்