- இதன் முன்பதிவு அக்டோபர் 6, 2023 முதல் தொடங்கும்
- இன்ஜினில் எந்தவித மாற்றமும் இல்லை
டாடா மோட்டார்ஸ் தனது மற்றொரு வரவிருக்கும் எஸ்யுவி டாடா ஹேரியரின் டீசரை வெளியிட்டுள்ளது. இந்த நேரத்தில் கார் தயாரிப்பாளர் அதன் டூ-ரோ எஸ்யுவியின் இன்டீரியரை டீஸ் செய்துள்ளது. புதிய ஹேரியருக்கான முன்பதிவு அக்டோபர் 6 ஆம் தேதி முதல் நாளை தொடங்குகிறது.
புகைபடங்களில் காணப்படுவது போல, ஹேரியர் ஒரு பெரிய 12.5-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமை பெறுகிறது, இது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்டை போலவே இருக்கும். இது இல்லுமினேட்டட் டாடா லோகோவுடன் டூ-ஸ்போக் டிசைன் ஸ்டீயரிங் வீலைப் பெறும். இது தவிர, எஸ்யுவி புதுப்பிக்கப்பட்ட ஃபுல்லி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரையும் பெறும்.
உட்புறத்தைப் பற்றி பேசுகையில், இது ஆம்பியண்ட் லைட்டிங், ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம், டச் அடிப்படையிலான எச்விஏசி கண்ட்ரோல்ஸ், புதிய கியர் லெவருடன் புதிதாக வடிவமைக்கப்பட்ட சென்டர் கன்சோல், வயர்லெஸ் சார்ஜர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் 360-டிகிரி சரவுண்ட் கேமரா ஆகியவை வழங்கப்படும்.
ஹேரியர் எஸ்யுவி ஆனது தற்போதைய மாடலில் உள்ள அதே 2.0-லிட்டர் க்ரியோடெக் டீசல் இன்ஜின் மூலம் இயக்கப்படும், இது சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டோர்க் கன்வர்டர் யூனிட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது BS6 ஃபேஸ் 2 கம்ப்ளைன்ட் இன்ஜினைப் பெறுகிறது, இது 168bhp மற்றும் 350Nm டோர்க்கையும் உருவாக்குகிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்