- ஐசிஇ வெர்ஷனிலும் வழங்கப்படலாம்
- கர்வ் இவி ஆகஸ்ட் 7 ஆம் தேதி லான்ச் செய்யப்படலாம்
டாடா கர்வ் இவி அறிமுகம் செய்யப்பட இன்னும் சில நாட்களே உள்ளன. டாடாவின் இந்த கூபே எஸ்யுவி மாடலுக்காக மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். டாடா நிறுவனம் இந்த புதிய எலக்ட்ரிக் மாடலை ஆகஸ்ட் 7 ஆம் தேதி சந்தையில் அறிமுகப்படுத்தும் என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம். தகவல்களின்படி, கர்வின் எலக்ட்ரிக் வெர்ஷன் முதலில் வெளியிடப்படும், அதன் பிறகு நிறுவனம் அதன் ஐசிஇ வெர்ஷனையும் மாத இறுதிக்குள் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது.
கர்வ் இவி அறிமுகம் செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, மற்றொரு டீசர் டாடாவால் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, எனவே இந்த டீசரின் படி, வாங்குபவர்கள் டாடாவின் இந்த புதிய எலக்ட்ரிக் மாடலில் பனோரமிக் சன்ரூஃப் கிடைக்கும். இது தவிர, கர்வ் இவியின் இன்டீரியரில் ஃபோர்-ஸ்போக் டூயல்-டோன் ஸ்டீயரிங் வீல், ஸ்டீயரிங் மவுண்டட் கன்ட்ரோல்ஸ், பிளாக் மற்றும் பெய்ஜ் இன்டீரியர் தீம், ஏசிக்கான டச் கன்ட்ரோல் ஃபங்ஷன், குரோம்-டோர் ஹேண்டல்ஸ் மற்றும் ஆட்டோ-டிம்மிங் ஐஆர்விஎம் போன்ற பல கவர்ச்சிகரமான அம்சங்கள் காணப்படுகின்றன.
இதனுடன், கர்வின் இவி மற்றும் ஐசிஇ வெர்ஷனில் எல்இடி லைட்டிங், டூயல்-டோன் அலோய் வீல்ஸ், ஸ்லோப்பிங்க் ரூஃப், எல்இடி லைட் பார்ஸ், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், லெவல் 2 ஏடாஸ், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் புதிய 12.3-இன்ச் டச்-ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
பவரை பொறுத்தவரை, இது இரண்டு பேட்டரி பேக்குகளின் விருப்பத்துடன் வரும். இதன் சிறிய அளவிலான பேட்டரி பேக், 40.5kWh திறன் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது நெக்ஸான் இவியின் டாப் வேரியன்ட் போன்றது. இரண்டாவது 55kWh யூனிட் பேட்டரி பேக், இது ஒரு எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்படும். இதை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், 600 கிமீ தூரம் வரை எளிதில் செல்ல முடியும் என்று வாகன உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்